VCK vs DMK : ‘விசிக கொடியை ஏற்ற முடியவில்லை.. இந்த ஆட்சியில் ஏன் இது நடக்குது?’ ஆதவ் அர்ஜூனா அட்டாக் மோட்!-vck deputy general secretary aadhav arjuna interviewed that criticism about the dmk alliance continues - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vck Vs Dmk : ‘விசிக கொடியை ஏற்ற முடியவில்லை.. இந்த ஆட்சியில் ஏன் இது நடக்குது?’ ஆதவ் அர்ஜூனா அட்டாக் மோட்!

VCK vs DMK : ‘விசிக கொடியை ஏற்ற முடியவில்லை.. இந்த ஆட்சியில் ஏன் இது நடக்குது?’ ஆதவ் அர்ஜூனா அட்டாக் மோட்!

HT Tamil HT Tamil
Sep 25, 2024 10:25 AM IST

Aadhav Arjuna : ‘இது எச்.ராஜாவின் கருத்து போல உள்ளது. அவர் தான், பாஜகவுக்கு எதிராக பேசினால் ‘ஆண்டி இந்தியன்’ என்பார். அதே போல தான், அதிகாரத்தைப் பற்றி கேட்டால், ‘இவன் பாஜக.,காரன், சங்கி..’ என்கிறார்கள். என்னுடைய ட்ராக் ரெக்கார்டை எடுத்துப் பாருங்கள்..’

VCK vs DMK : ‘விசிக கொடியை ஏற்ற முடியவில்லை.. இந்த ஆட்சியில் ஏன் இது நடக்குது?’ ஆதவ் அர்ஜூனா அட்டாக் மோட்!
VCK vs DMK : ‘விசிக கொடியை ஏற்ற முடியவில்லை.. இந்த ஆட்சியில் ஏன் இது நடக்குது?’ ஆதவ் அர்ஜூனா அட்டாக் மோட்!

‘‘என்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன், தெளிவாக இருக்கிறேன். இதில் முரண்பாடுகளோ, மாற்றுக் கருத்தோ கிடையாது. என்னுடைய ஒட்டுமொத்த பேட்டியில் முதலில் மது ஒழிப்பு, போதை பொருள் ஒழிப்பு பற்றி இருந்தது. அதன் பின், மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தலைவர் திருமாவின் கருத்தை நான் பதிவு செய்தேன். அதில் எந்த தவறும் இல்லை. ஜனநாயக இயக்கத்தில் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். நான் என் கருத்தில் பின்வாங்கும் அளவிற்கு என்ன தவறு செய்திருக்கிறேன் என்று தெரியவில்லை. 

விசிக ஓட்டு எவ்வளவு தெரியுமா?

விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி.,யின் கருத்திலிருந்து நான் முரண்படவில்லை. என்னுடைய கருத்து, ஒரு கூட்டணி உருவாகிறது, அதில் கிடைத்த வெற்றியை ஒரு தனிக்கட்சி, தன்னுடைய வெற்றியாக அதை பரப்பியது தான் தவறான மனப்பான்மை என்பது என்னுடைய கருத்து. ‘உங்களுக்கு இரு சதவீதம் தானே ஓட்டு இருக்கிறது?’ என்று பத்திரிக்கையாளர்கள் என்னை நோக்கி கேள்வி எழுப்பும் போது, விசிக.,வின் துணைப் பொதுச் செயலாளராக எனக்கு பதிலளிக்க நேர்ந்தது. என்னிடம் விசிக ஓட்டு சதவீதத்தின் டேட்டா என்னிடம் இருந்தது. 

அந்த டேட்டாவை தான் நான் சொன்னேன். தமிழ்நாடு முழுக்க விசிக.,வுக்கு 30 லட்சம் ஓட்டுகள் உள்ளன. அதன் வளர்ச்சியை பாருங்கள். எதிர்காலத்தில் அதிகாரத்துக்கு வர வேண்டும், கூட்டணி ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனுக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு. அதை நான் பொதுத்தளத்தில் வைக்கிறேன். இந்த சிந்தனையே தவறு என்பது எப்படி? இதை எப்படி திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எதிர்க்கிறார் என்று தெரியவில்லை. 

இதே ஆந்திராவில், கூட்டணிகளோடு வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை வழங்கினார், துணை முதல்வர் பொறுப்பை வழங்கினார். அது தானே ஜனநாயக வழிமுறை. இது தான் அதிகாரபரவல். இந்த சிந்தனை தமிழ்நாட்டில் வர வேண்டும். எங்களுடைய கட்சி அதிகார பரவலை நோக்கிச் செல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். அதற்கான செயல்திட்டத்தை உருவாக்க முயற்சிக்கிறேன், இதில் தவறில்லை. அது எங்கள் உரிமை.

தமிழ்நாட்டில் எந்த கட்சியும் இல்லை

ஜனநாயகத்தில் தனியாக நிற்பது பெரியவிசயமில்லை. தனியாக வெற்றி பெற 47 சதவீதம் ஓட்டுகள் தேவை. தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் அத்தனை சதவீதம் இல்லை. கூட்டணியால் மட்டுமே வெற்றி பெற முடியும். தனியாக நிற்கும் மனப்பான்மை எந்த கட்சிக்கும் இல்லை. காரணம், அரசியல் சூழல் அப்படி உள்ளது. எங்களுடைய எதிர்கால திட்டத்தைப் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்றைக்காக நாங்கள் கேள்வி கேட்கவில்லை.

எங்களின் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். என்னை பாஜக தூண்டுவதாக ஆ.ராசா பேசியிருக்கிறார். அவருடன் நான் பயணித்தவன். என்னைப் பற்றி அவருக்குத் தெரியும். நான் இருக்கும் கட்சியை வளர்க்கக் கூடிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. 1999 ல் திருமா என்ன பேசினாரோ, அதில் நான் உடன்படுகிறேன். அதை தான் பேசுகிறேன். 

போகிற போக்கில் ரவிக்குமாருக்கும் பதில்

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று ரவிக்குமார் புத்தகம் எழுதியிருக்கிறார். அதை தான் நான் பேசுகிறேன். விசிக அதிகாரத்தை நோக்கி நகர்வது எப்படி, பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்? விசிகவில் அமைச்சர்கள் வந்தால், அவர்கள் பாஜகவுக்கு சாதகமாக இருப்பார்கள் என்று சொல்கிறார்களா? எங்களை விட பாஜகவை எதிர்ப்பவர்கள் இங்கு யார்?

இது எச்.ராஜாவின் கருத்து போல உள்ளது. அவர் தான், பாஜகவுக்கு எதிராக பேசினால் ‘ஆண்டி இந்தியன்’ என்பார்.  அதே போல தான், அதிகாரத்தைப் பற்றி கேட்டால், ‘இவன் பாஜக.,காரன், சங்கி..’ என்கிறார்கள். என்னுடைய ட்ராக் ரெக்கார்டை எடுத்துப் பாருங்கள், நான் போவதாக இருந்தால் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போயிருக்க முடியும். இன்று விசிகவின்., கொடியை எந்த இடத்திலும் ஏற்ற முடியவில்லை. இந்த ஆட்சியில் ஏன் இது நடக்கிறது? மதுரையில் சமீபத்தில் எங்கள் தலைவர் இது பற்றி பேசியிருக்கிறார். 

ஆணவக் கொலை தொடர்பான சட்டத்தை இதுவரை கொண்டு வரவில்லை. தொழிலாளர்கள் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக தான் குறைந்த பட்ச செயல்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். நான் திமுகவை குறிப்பிட்டு என் கருத்தை கூறவில்லை. ஆனால், சம்மந்தமில்லாமல் திமுக எதற்காக இதற்கு எதிர்வினையாற்றினார்கள் என்று தெரியவில்லை.

பதில் சொல்லுங்கள் ஆ.ராசா

ஆ.ராசா அவர்களிடம் நான் கேட்கிறேன், உங்களுக்காக தான் நான் கேட்கிறேன். தமிழ்நாட்டில் எத்தனை தலித் மக்கள் இருக்கிறார்கள்? எத்தனை சேரிகள் இருக்கின்றன? அங்கே பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது? சமூகநீதி பற்றி என்னிடம் ஆ.ராசா அண்ணன் கேட்கிறார். நான் கேட்கிறேன், ஏன் பெரம்பலூரில் நிற்காமல், நீலகிரிக்கு செல்கிறீர்கள்? சொந்த தொகுதியை விட்டு ஏன் நீலகிரி செல்ல வேண்டும்? அந்த சமூகநீதியை தான் நான் வலியுறுத்துகிறேன்,’’

என்று அந்த பேட்டியில் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.