தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Union Minister L. Murugan Spoke About Ambedkar Memorial Day

L. Murugan : பிரதமருக்கு புனித நூல் அம்பேத்கர் இயற்றிய சட்டம் தான் - எல்.முருகன்

Divya Sekar HT Tamil
Dec 06, 2022 01:35 PM IST

சென்னை ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கரின் உருவச்சிலை திறக்கும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அம்பேத்கர் உருவச் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “ஆளுநரின் முயற்சியால் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது ஒரு வரலாறு. அம்பேத்கர் எப்படி நியாயத்திற்காக போராடினாரோ அது போல அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க போராட வேண்டிய சூழல் உள்ளது. இந்த நேரத்தில் ஆளுநர் அம்பேத்கருக்கு உரிய மரியாதையை வழங்கியுள்ளார்.

அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நிறுவியவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அம்பேத்கர் இயற்றிய சட்டம் தான் எனது புனித நூல் என பிரதமர் கூறியுள்ளார். 2014 க்கு முன் அம்பேத்கர் பிறந்த வீடு எங்கே என்பது யாருக்குமே தெரியாது. 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு 125 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது.

அந்த நேரத்தில் அவர் பிறந்த இடம் மற்றும் அம்பேத்கர் டெல்லியில் மறைந்த இடம் என இந்த இரண்டு இடங்களையும் புனரமைத்து மிகப் பெரிய மணிமண்டபம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட போது, அண்ணல் அம்பேத்கர் பெயரில் பீம் என்ற பெயரில் செயலி கொண்டு வரப்பட்டது

இந்திய அரசியலமைப்பு சட்டம் கொண்டு வந்தவர் அம்பேத்கர். அவரது சிலை மூடப்பட்டு, பூட்டப்பட்டுள்ளது வெட்கப்பட வேண்டியது தலைகுனிவு. அத்தகைய தலைவரை போற்ற மறந்திருக்கிறோம். 2015ஆம் ஆண்டு முதல் அவரின் பெருமையை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வருகிறோம்”என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்