Kodaikanal Mist: ‘என்ன ஒரே புகை மூட்டமா இருக்கு’ கொடைக்கானல் பயணிகள் ஏமாற்றம்!
பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிதமான வேகத்தில் ஊர்ந்தபடி சென்றன. தொடர்ந்து மாலை வரை இதேநிலை நீடித்தது.
இரு நாள் தடைக்குப் பின் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், மூடு பனி காரணமாக, சுற்றுலாதலங்களை ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்தசிலநாட்களாககாற்றுடன் கூடிய மழைபெய்து வந்தது. சுற்றுலா தலங்களில் மரங்கள் முறிந்து விழுந்திருந்ததால் கடந்த இரண்டு நாட்களாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இன்று தடை நீக்கப்பட்டு மீண்டும் சுற்றுலாப்பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளிக்கப்பட்டது. வார விடுமுறையினை தொடர்ந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா சுற்றுலாப்பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்ததால், இன்று ஒரே நாளில் பெருங்கூட்டம் சேர்ந்தது. இன்று அதிகாலை முதலே கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அடர்ந்த மேகமூட்டம் தரை இறங்கியது. இதனால் எதிரேவரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து வருவது கூட தெரியாத அளவிற்கு அடர்ந்த மேகமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம்அடைந்தனர்.
பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிதமான வேகத்தில் ஊர்ந்தபடி சென்றன. தொடர்ந்து மாலை வரை இதேநிலை நீடித்தது. அடர்ந்த மேகமூட்டம் காரணமாக சுற்றுலாப்பயணிகள் பசுமை பள்ளதாக்கு, மோயர் சதுக்கம், தூண்பாறை, குணாகுகை, பைன் மரக்காடுகள், அமைதிபள்ளதாக்கு, உள்ளிட்ட சுற்றுலாஇடங்களைகாணமுடியவில்லை.
இருப்பினும் மலைப்பகுதியில் மிதமான வெப்பத்துடன் கூடிய இதமான கால நிலையினையும் ஒரு சில இடங்களில் தெரிந்த இயற்கை காட்சிகளையும் தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்களையும் கண்டு உற்சாகம்அடைந்தனர்.
அதனைத்தொடர்ந்துநகர் பகுதிகளிலும் காணப்பட்ட மேக மூட்டங்களின் இடையே சைக்கிள்சவாரி, குதிரை சவாரி, படகுசவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
வாரவிடுமுறை தினத்தை ஒட்டி அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்ததால் சுற்றுலா தொழில்புரிவோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.