TOP 10 NEWS: ’ஆதவ்’வுக்கு உதயநிதி பதிலடி! செந்தில் பாலாஜிக்கு அண்ணமலை எச்சரிக்கை! டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’ஆதவ்’வுக்கு உதயநிதி பதிலடி! செந்தில் பாலாஜிக்கு அண்ணமலை எச்சரிக்கை! டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’ஆதவ்’வுக்கு உதயநிதி பதிலடி! செந்தில் பாலாஜிக்கு அண்ணமலை எச்சரிக்கை! டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Dec 07, 2024 07:53 PM IST

TOP 10 NEWS: ஆதவ் அர்ஜூனாவுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி, விஜய்யை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை எச்சரிக்கை, திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’ஆதவ்’வுக்கு உதயநிதி பதிலடி! செந்தில் பாலாஜிக்கு அண்ணமலை எச்சரிக்கை! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ’ஆதவ்’வுக்கு உதயநிதி பதிலடி! செந்தில் பாலாஜிக்கு அண்ணமலை எச்சரிக்கை! டாப் 10 நியூஸ்!

2.தீபத்திருவிழாவுக்கு சிறப்பு பேருந்துகள்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 4 ஆயிரத்து 89 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

3.ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கையா?

ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் விசிக சார்பில் முடிவு எடுக்கப்படவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தகவல்.

4.விஜய் மீது திமுக விமர்சனம் 

திரையுலகில் நடிகர் விஜய் மைனஸ் ஆனதால் அரசியலுக்கு வந்து உள்ளார். திமுக கூட்டணி உறுதியாக உள்ளது; அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து. 

5.திருமாவளவனுக்கு அழுத்தம்?

விஜய் கூறியது போல் திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு அழுத்தம் இருப்பதை உணர்கிறோம். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டிருக்க வேண்டும். வாரிசு அடிப்படையிலேயே ஸ்டாலின் முதலமைசரானார் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கருத்து. 

6.கூட்டணி அமைப்பதில் பேராசை இல்லை 

கூட்டணி அமைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பேராசை இல்லை. அங்கே போனால் அள்ளலாமா, இங்கே போனால் வாரலாமா என்றெல்லாம் நினைப்பது இல்லை. கூட்டணி நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தெளிவாக உள்ளது. எதை எந்த நேரத்தில் எப்படி அணுக வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு.

7.ஆதவ் அர்ஜூனாவுக்கு உதயநிதி பதிலடி 

மன்னர் ஆட்சி நடப்பதாக ஆதவ் அர்ஜூனா கூறிய நிலையில் ”யார் இங்க பிறப்பால் முதல்வர் ஆனது; மக்கள் தேர்ந்தெடுத்துதான் முதல்வரானாரு. அந்த அறிவுகூட இல்லை, அந்த ஆளுக்கு” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி. 

8.செந்தில் பாலாஜிக்கு பாஜக பயப்படாது

மக்கள் நலன் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது திமுக அரசின் கடமை. வழக்கு தொடர்வோம் என்ற அமைச்சர் செந்தில் பாலாஜியின் உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் தமிழக பாஜக பயப்படாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து. 

9.செந்தில் பாலாஜிக்கு பாமக பதில் 

இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி 15 நாட்களுக்கு முன் வினா எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலளிப்பதாகக் கூறி மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால், அந்த அறிக்கையில் பா.ம.க.வின் வினாவுக்கு பதில் இல்லை; மாறாக வழக்கமாகப் பாடும் பல்லவியைத் தான் செந்தில் பாலாஜி மீண்டும் பாடியிருக்கிறார் என பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு அறிக்கை. 

10.சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு பாமக கண்டனம்

தமிழ்நாடு காவல்துறைக்கு 621 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழக அரசு இன்று வரை வெளியிடவில்லை. உதவி ஆய்வாளர்கள் தேர்வில் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் நடந்த குளறுபடிகளை சரி செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் தமிழக அரசு இன்னும் முழுமையாக செயல்படுத்தவில்லை. சமூகநீதி சார்ந்த இந்த சிக்கலில் தமிழக அரசும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையமும் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.