TOP 10 NEWS: ’கோயிலில் ரீல்ஸ்! பெண் அறங்காவலருக்கு ஆப்பு ரெடி! தூய்மை பணியாளர்கள் உடன் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’கோயிலில் ரீல்ஸ்! பெண் அறங்காவலருக்கு ஆப்பு ரெடி! தூய்மை பணியாளர்கள் உடன் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’கோயிலில் ரீல்ஸ்! பெண் அறங்காவலருக்கு ஆப்பு ரெடி! தூய்மை பணியாளர்கள் உடன் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Oct 17, 2024 07:23 PM IST

TOP 10 NEWS: ரீல்ஸ் எடுத்த அறங்காவலரை கண்டித்த நீதிமன்றம், தூய்மை பணியாளர்கள் உடன் சாப்பிட்ட முதல்வர், அதிமுக குறித்து ஈபிஎஸ் பேட்டி, ஆளுநர் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’கோயிலில் ரீல்ஸ்! பெண் அறங்காவலருக்கு ஆப்பு ரெடி! தூய்மை பணியாளர்கள் உடன் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ’கோயிலில் ரீல்ஸ்! பெண் அறங்காவலருக்கு ஆப்பு ரெடி! தூய்மை பணியாளர்கள் உடன் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!

2.வீடுகள் கட்டும் திட்டம் - ரூ.209 கோடி ஒதுக்கீடு.

ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2024 - 2025 ஆம் ஆண்டில் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ. 209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. ஒரு வீட்டுக்கு ரூ.1.20 லட்சம் என்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு. மத்திய அரசின் பங்கு 125 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை 83 கோடி என்று மொத்தம் ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

3.அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது 

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்ததற்கு எதிரான வழக்கில் அரசின் பரிந்துரையை மீண்டும் ஆளுநர் பரிசீலனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். அதனை அவர் மீற முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி உத்தரவு.

4.நியோமேக்ஸ் சொத்தை கையகப்படுத்தி அரசாணை வெளியிடுக

ரூ.6,000 கோடி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை கையகப்படுத்தி அரசாணை வெளியிட ஆணை. நிதி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை முடக்கி வருகிற 19ஆம் தேதிக்குள் அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு. தவறும் பட்சத்தில் தமிழக உள்துறைச் செயலர், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை.

5.சாமிக்கு என்ன மரியாதை? - நீதிபதி கண்டனம்

திருவேற்காடு கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்மகர்த்தா மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. கோவில் வளாகத்துக்குள் ரீல்ஸ் வீடியோ எடுத்தால் சாமிக்கு என்ன மரியாதை? என நீதிபதி தண்டபாணி கண்டனம்.

6.நீக்கியவர்களை இணைக்க சொன்னார்களா? ஈபிஎஸ் மறுப்பு!

“பிரிந்து கிடக்கின்ற என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அவ்வளவுதான்.6 முக்கிய தலைவர்கள் என்னிடம் வந்து, நீக்கப்பட்டவர்களை இணைக்கச் சொன்னார்கள் என்று சொல்வது பச்சைப் பொய்” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

7. 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

8. அரவக்குறிச்சி அருகே சாலை விபத்து

அரவக்குறிச்சி அருகே காஷ்மீர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் மீது ஈச்சர் லாரி மோதி கவிழ்ந்தது. பின்னால் வந்த காரும் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.

9. சாம்சாங் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்

சாம்சாங் ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் பணியாளர்கள் மீண்டும் வழக்கம் போல் பணிக்கு திரும்பினர்.

10. மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்

குன்னூர்-உதகமண்டலம் இடையே லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் இருந்து விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு இன்று வழக்கம் போல் மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது. தொடர் மழை காரணமாக கடந்த 2 நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.