Top 10 News: ’டெல்டாவில் ரெட் அலார்ட்! நாகையில் நாளை விடுமுறை! முதல்வருக்கு எதிராக அன்புமணி!’ டாப் 10 நியூஸ்!
Top 10 News: டெல்டா மாவட்டங்களில் ரெட் அலார்ட், நாகையில் நாளை விடுமுறை, ராமதாஸ் மீது முதலமைச்சர் விமர்சனம், முதல்வருக்கு அன்புமணி கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

1.நாகையில் நாளை விடுமுறை
ரெட் அலார்ட் காரணமாக நாகையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் டெல்ட்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலார்டும் விடுக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை.
2.தீவிரம் அடையும் பருவமழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும். வரும் 29ஆம் தேதி அன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி.
3.புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தமிழ்நாட்டை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வரும் நிலையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.