TOP 10 NEWS: ’கஸ்தூரியை தேடும் போலீஸ்! கூட்டணி குறித்து ஹெச்.ராஜா பேட்டி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி, கஸ்தூரியை தேடும் போலீஸ், ஓம்கார் பாலாஜிக்கு சிறை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, தமிழக அரசை சாடும் ஈபிஎஸ் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.பிரேமலதா விஜயகாந்த் சரமாரி கேள்வி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அரசுப்பள்ளியில் திரைப்படம் வெளியிட்டது கண்டனத்திற்கு உரியது. கல்வி கற்கும் இடத்தில் திரைப்படம் காண்பிக்க அவசியம் என்ன என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி.
2.சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
சபரிமலை சீசனையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை செண்டிரல் மற்றும் கேரளாவின் கொல்லம் இடையே வரும் நவம்பர் 19ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
3.கூட்டணி குறித்து ஹெச்.ராஜா கருத்து
கூட்டணிக்காக நாங்கள் அதிமுகவிடம் அப்ளிகேஷம் போடவில்லை; ஏற்கெனவே எங்களுடன் பயணிப்பவர்கள் உடன் கூட்டணி தொடர்கிறது என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா பேட்டி.
4.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றப்பத்திரிக்கை
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு உள்ளது. சுமார் ஒரு லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல் ஆனது காகித வடிவில் 27 பேருக்கு வழங்கப்பட்ட நிலையில் வரும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை எழும்பூர் நீதிமன்றம் நீட்டித்து உள்ளது.
5.ஈபிஎஸ் உடன் விவாதிக்கத் தயார்
யார் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். முதலமைச்சர் வேண்டாம்; நானே விவாதிக்கிறேன் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி.
6.திமுக அரசு மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடி முதலமைச்சர் முயற்சி செய்கிறார். 523 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு 10 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது. திட்டங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட அரசை வலியுறுத்தி வருகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
7. கஸ்தூரியை பிடிக்க தனிப்படை அமைப்பு
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகர் கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
8. ஓம்கார் பாலாஜிக்கு சிறை
சர்ச்சைக்குரிய பேச்சு வழக்கில் கைதான அர்ஜுன் சம்பத்தின் மகனும் இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜிக்கு வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவு.
9. கணினி பாடம் குறித்து ராமதாஸ் கருத்து
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனிப்பாடமாக அறிவித்து, அதற்கான பயிற்றுனர் பொறுப்பில் கணினி அறிவியல் பட்டத்துடன் கல்வியியல் பட்டமும் பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று கணினி அறிவியல் பட்டதாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அந்தக் கோரிக்கையை ஆய்வு செய்வதற்குக் கூட தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. கணினி அறிவியலை தனிப்பாடமாக்க தமிழக அரசு மறுத்து வருவது மிகவும் பிற்போக்கான செயலாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து.
10. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் ஆசிரியர்களையும் விடுதிகளுக்கு விற்பனை செய்ய கல்வித்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.
டாபிக்ஸ்