TOP 10 NEWS: விஜயை பார்த்து பயமில்லை! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: புதிய காற்றழுத்த பகுதி உருவாக்கம், விஜய் உடன் கூட்டணி குறித்து டிடிவி பதில், மஞ்சக்கொல்லை விவகாரம் தொடர்பாக திருமாவளவன் அறிக்கை, காவல்துறை மீது மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.விசிகவில் இருந்து நீக்கம்
கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை விவகாரத்தில் விசிக தொகுதி செயலாளர் செல்லப்பன், மகளிர் விடுதலை இயக்க மாநில நிர்வாகி செல்வி முருகன் கட்சியில் இருந்து நீக்கம். விசிகவின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வையில் பேசியதால் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் நடவடிக்கை.
2.விஜயை பார்த்து பயப்படவில்லை
நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை. விஜய் கட்சி தொடங்கியதால் எங்களுக்கு பதற்றம் இல்லை. அவரை கண்டு நாங்கள் பயப்படவில்லை; எங்களுக்கு கவலை இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.
3.அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு
கோயம்புத்தூரில் அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அமரன் படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக கூறி கோவை சாந்தி திரையரங்கம் முன் போராட்டம்.
4.மேட்டூர் அணையை தூர்வார நடவடிக்கை
90 ஆண்டுகளில் முதன் முறையாக மேட்டூர் அணையை தூர்வார தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டு உள்ளது. சோதனை அடிப்படையில் மேட்டூர் அணையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண்ணை தூர்வார திட்டமிட்டப்பட்டு உள்ளது.
5.பாஜகவை நம்புவது வீண்
பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வரும் தேர்தலில் திமுகவிற்கு பிரச்சாரம் செய்வேன். பாஜகவில் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதால் விலகிவிட்டேன். பிராமணர்கள் அல்ல; யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண் என நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி.
6.தவெகவுடன் கூட்டணியா? டிடிவி பதில்
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி என்ற யூகத்திற்கு என்னால் பதில் கூற முடியாது. 2026ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சியால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி.
7.நாளை வேலை நாள்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பள்ளி, கல்லூரிகள் நாளை (09-11-2024) அன்று செயல்படும். தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கபட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாளாக அறிவிப்பு.
8.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்மேற்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாட்களில் தமிழகம், இலங்கையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
9.பணமதிப்பு நீக்கம் குறித்து விமர்சனம்
மோடியின் பணமதிப்பு நீக்க பேரழிவு சுத்ந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடி. பணமதிப்பிழப்பு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை அழித்த இந்திய வரலாற்றின் கருப்புநாள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து.
10. பொய்களை பரப்பும் காவல்துறை
தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் கடலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலைகளை உடைக்க பாட்டாளி மக்கள் கட்சி திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினர் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்களாம். ’’பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கடா போக்கத்த பசங்களா” என்றொரு பழமொழி கிராமத்தில் கூறப்படுவதுண்டு. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான கடலூர் மாவட்ட காவல்துறையினரின் பொறுப்பற்ற புளுகுகளைப் பார்த்தால் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.
டாபிக்ஸ்