TOP 10 NEWS: ’கூட்டணிக்கு 100 கோடியா? களத்தில் குதித்த தவெக!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: கூட்டணி குறித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், போராட்டத்தில் குதித்த தவெக, டங்ஸ்டன் எடுக்க பாமக எதிர்ப்பு, விஜய் குறித்து கே.பாலகிருஷ்ணண் பேட்டி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.கூட்டணிக்கு 100 கோடியா?
கூட்டணிக்கு வருபவர்கள் சும்மா வருவது இல்லை; 20 சீட் கொடுங்க; 50 கோடி ரூபாய் அல்லது 100 கோடி ரூபாய் கொடுங்க என்று கேட்கிறார்கள். கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவான் பேச்சு.
2.மதுரையில் போட்டத்தில் குதித்த தவெக
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் சின்ன உடைப்பு கிராம மக்களுக்கு தவெக ஆதரவு அளித்து உள்ளது. விஜயின் உத்தரவுப்படி தெற்கு மாவட்ட தலைவர் தங்கப்பாண்டி தலைமையிலான தவெக நிர்வாகிகள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
3.அதிமுக ஆட்சி அமைக்காவிட்டால்…!
வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா போன்றது. அதிமுக தோல்வி அடைந்தால் அரசியல் களம் மாறி சிறிய கட்சிகள் மேலே வருவதற்கான நிலை உண்டாகும் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி.
4.விஜய் குறித்து கம்யூனிஸ்ட் விமர்சனம்
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது, மோகம் பெரியதாக இருக்கும். தவெகவுடன் எந்த கட்சிகளும் கூட்டணி வைக்கிறோம் என்று சொல்லவில்லை. அது அரசியல் களத்தில் எவ்வித தாக்கத்தையும் உண்டாக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.
5.திருச்செந்தூர் சம்பவம் குறித்து அமைச்சர் பேட்டி
திருச்செந்தூரில் யானை மிதித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிச்சயம் உதவி செய்யப்படும். தகுதி இருந்தால் யானை மிதித்து இறந்த சிசுபாலன் மனைவிக்கு அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
6. தீர்மானிப்பது மக்கள்தான்!
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆட்சிக்கு ஆசைப்படலாம்; ஆட்சியை கைப்பற்ற நினைப்பது தவறில்லை; ஆனால் எல்லாவற்றையும் தீர்மானிப்பது மக்கள்தான் என விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு.
7. போதை பொருள் பறிமுதல்
சென்னையில் கொக்கையின் போதைப் பொருள் கடத்த்லி வழக்கில் முக்கிய டீலர் சீனிவாசனை தென் மண்டல தனிப்படையினர் கைது செய்தனர். சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு கிலோ கொக்கைன் பறிமுதல்.
8.பெண்ணுக்கு கத்திக்குத்து
சென்னை அயனாவரத்தில் இளம் பெண்ணை துரத்தி கத்தியால் வெட்டிய இளைஞர் குறித்து போலீசார் விசாரணை.
9.எல்.ஐ.சிக்கு ராமதாஸ் கண்டனம்
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எல்.ஐ.சியின் இணைய தளத்தின் முகப்புப் பக்கம் இதுவரை ஆங்கில மொழியில் இருந்த நிலையில் இப்போது இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. இது பிற மொழி பேசும் மக்கள் மீதான அப்பட்டமான இந்தித் திணிப்பு ஆகும். எல்.ஐ.சி நிறுவனத்தின் இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
10.டங்ஸ்டன் எடுக்கு அன்புமணி எதிர்ப்பு!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப் பகுதிகளில் ஒன்றான அரிட்டாப்பட்டியை சீரழிக்கும் வகையிலான இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.
டாபிக்ஸ்