TOP 10 NEWS: ’டாக்டருக்கு கத்திக்குத்து! அரசை சாடும் விஜய்! கங்குவா படத்தை வெளியிட அனுமதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து, தமிழக அரசை சாடும் விஜய், கங்குவா படத்தை வெளியிட அனுமதி, தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை, மகளிர் உரிமை தொகை குறித்து ராமதாஸ் விமர்சனம் உள்ளிட்ட டாப் 10 செய்திகள் இதோ!
1.அரசு மருத்துவர் நலம் உடன் உள்ளார்
சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் தாக்குதலுக்கு உள்ளான அரசு மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார். மருத்துவ சிகிச்சையில் குறைபாடு உள்ளதாக போலியான காரணத்தை சொல்லி தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
2.கத்தியால் குத்தியவருக்கு வழக்கு
கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கிண்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு.
3.தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ட்வீட்.
4.தமிழக அரசு மீது மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்
அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயம். 2026ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திலேயே திமுக அரசு இது போன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்.
5.கங்குவா படத்திற்கு சிக்கல் தீர்ந்தது
1.60 கோடி ரூபாயை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்திய நிலையில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தை வெளியிட நிபந்தனை உடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
6. தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
7. திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் சென்னையில் வரும் நவம்பர் 20ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
8. தேவநாதன் யாதவ் மீது குற்றப்பத்திரிக்கை
மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகந்தாஸ், மகிமை நாதன், தேவசேனாபதி, சுதிர் சங்கர் உள்ளிட்டோரு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
9. அர்ஜூன் சம்பத் மகன் மன்னிப்பு கேட்டார்
பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசியதற்காக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி, உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தில் அவ்வாறு பேசிவிட்டதாக அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பொறுப்புள்ள அரசியல்வாதி இதுபோன்ற காரணங்களைக் கூறக்கூடாது எனத் தெரிவிப்பு. கோவையில் அக்.27ல் நடந்த கூட்டத்தில் ஓம்கார் பாலாஜி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
10. கஞ்சா கடத்தியவர்கள் கைது
தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியான எளாவூர் சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல். காரில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸாவை சேர்ந்த சந்தோஷ் நாய்க், கேரளாவை சேர்ந்த மித்தில்லா, கும்பகோணத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி ஆகிய மூவர் கைது. ஆவடி காவல் ஆய்வாளர் ராம்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
டாபிக்ஸ்