Tomato Price Hike: ’கிலோ 60 ரூபாய்க்கு நியாய விலைக் கடைகளில் தக்காளி!’ அமைச்சர் பெரியக்கருப்பன் அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tomato Price Hike: ’கிலோ 60 ரூபாய்க்கு நியாய விலைக் கடைகளில் தக்காளி!’ அமைச்சர் பெரியக்கருப்பன் அறிவிப்பு!

Tomato Price Hike: ’கிலோ 60 ரூபாய்க்கு நியாய விலைக் கடைகளில் தக்காளி!’ அமைச்சர் பெரியக்கருப்பன் அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Jul 03, 2023 02:26 PM IST

”விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை தொடர்ந்து வாங்கும் அளவுக்கு தக்காளி உள்ளிட்ட தோட்டப்பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு வழங்க வேண்டும்”

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியக்கருப்பன் ஆலோசனை நடத்தினார்.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியக்கருப்பன் ஆலோசனை நடத்தினார்.

நியாயவிலைக்கடைகளில் கிலோ 60 ரூபாய் விலைக்கு இந்த தக்காளி விற்பனை செய்யப்படும். இப்போது தலைநகரங்களிலும் பின்னர் படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் குறிப்பிட்ட கடைகளில் விரிவுப்படுத்தப்படும்.

இதில் யாரையும் குறை சொல்வதற்கு இல்லை. நம்முடைய தக்காளி தேவையை நம்முடைய மாநிலம் மட்டும் பூர்த்தி செய்தது இல்லை, அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திராவில் இருந்து நமக்கு தக்காளி வந்தது. எல்லா மாநிலங்களிலும் வரத்து குறைந்ததால் தற்போது நமது மாநிலத்திலும் வரத்து குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் இந்த தக்காளி விலையேற்றம் உள்ளது. பருவகாலத்தில் இந்த தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம்தான். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பண்ணை பசுமை கடைகளில் வழக்கத்தை விட 4 மடங்கு விற்பனை கூடி உள்ளது. குறைந்தபட்சம் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கிலோ வரை விற்பனை ஆகி கொண்டுள்ளது.

நுகர்வோர்களையும் விவசாயிகளையும் பாதிக்காமல் இந்த விற்பனையை செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுத்தி உள்ளார்கள். அந்த அறிவுத்தலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இதன் விளைவு ஓரிரு நாட்களில் உங்களுக்கு தெரியும்.

பிறமாநிலங்களில் இருந்து தக்காளி வந்தது, நம்முடைய மாநிலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் இருந்துதான் 75% உற்பத்தி நடைபெற்றது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தக்காளி விலை உயர்வு என்பது தொடர்ந்து நடந்து கொண்டு உள்ளது. எதிர்காலத்தில் இது போன்று நெருக்கடிகள் வராத அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை தொடர்ந்து வாங்கும் அளவுக்கு தக்காளி உள்ளிட்ட தோட்டப்பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு வழங்க வேண்டும்.

தக்காளி பதுக்கல் என்பது எதுவும் இல்லை, வியாபாரிகளும் நமக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என அமைச்சர் பெரியக்கருப்பன் தெரிவித்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.