TOP 10 NEWS: திருச்சியில் செயலிழந்த விமான சக்கரம் முதல் திருவாரூரில் குழந்தை விற்பனை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: திருச்சியில் செயலிழந்த விமான சக்கரம் முதல் திருவாரூரில் குழந்தை விற்பனை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: திருச்சியில் செயலிழந்த விமான சக்கரம் முதல் திருவாரூரில் குழந்தை விற்பனை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Published Oct 11, 2024 07:57 PM IST

TOP 10 NEWS: திருச்சியில் புறப்பட்ட விமானம் அந்தரத்தில் பழுது, முரசொலி செல்வம் உடல் தகனம், 3 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை, தனியார் பேருந்துகளை இயக்கும் அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: திருச்சியில் செயலிழந்த விமான சக்கரம் முதல் திருவாரூரில் குழந்தை விற்பனை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: திருச்சியில் செயலிழந்த விமான சக்கரம் முதல் திருவாரூரில் குழந்தை விற்பனை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

1.திருச்சியில் விமானம் பழுது 

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தை தரையிறக்க முயற்சி நடைபெறுகின்றது. மாலை 5.40 மணிக்கு புறப்பட்ட விமானம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக விமானம் வட்டமடிக்கின்றது. விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்கலாம் என தகவல். 

2.முரசொலி செல்வம் உடல் அடக்கம் 

மறைந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான முரசொலி செல்வத்தின் உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

3. மிக கனமழை எச்சரிக்கை 

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை. 

4. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு 

தொடக்க நிலையில் உள்ள வழக்குகளை முறையாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், அனைத்து நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

5.தற்காப்பு பயிற்சிக்கு நிதி ஒதுக்கீடு 

அரசு சேவை இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க 1.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

6. ஆண் புலிக்குட்டி உயிரிழப்பு 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 5 மாத ஆண் குட்டி புலி உயிரிழந்தது. வாகனம் மோதி உயிரிழந்த புலிக்குட்டியின் பிரேதத்தை வனத்துறை அதிகாரிகள் உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

7. தனியார் பேருந்துகள் இயக்கம் 

ஆயுத பூஜையையொட்டி தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகின்றது. விழுப்புரம் கோட்டத்தில் உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, வேலூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. 

8. பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி 

கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி அளித்து உள்ளது.  முன்னதாக அப்பகுதிகளில் யானைகள் கூட்டம் இருந்ததால் ஏற்கெனவே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

9. 1.62 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் 

ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நேற்று அரசுப்பேருந்துகள் மூலம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 240 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து உள்ளனர். 

10. திருவாரூரில் குழந்தை விற்பனை என புகார்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே 10 மாத பெண் குழந்தை ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி குழந்தை விற்கப்பட்ட நிலையில் சைல்டு ஹெல்ப் லைனுக்கு அக்கம்பக்கத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில் குழந்தையின் தாய் மற்றும் 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு.