TOP 10 NEWS: ’பதவி ஏற்பு விழாவுக்கு வராத PTR முதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு, அமைச்சரவை பதவி ஏற்புக்கு வராத பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர்களுக்கு ராமதாஸ் வாழ்த்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’பதவி ஏற்பு விழாவுக்கு வராத PTR முதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
1.புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு
தமிழக அமைச்சரவையில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி.செழியன் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
2.அமைச்சர்களும் துறைகளும்!
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று உள்ள செந்தில் பாலாஜிக்கு மதுவிலக்கு, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைகள் துறையும், நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், கோவி.செழியனுக்கு உயர்க்கல்வித்துறையும், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு சுற்றுலாதுறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.