TOP 10 NEWS: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கமல் எதிர்ப்பு முதல் பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு வரை! டாப் 10 நியூஸ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கமல் எதிர்ப்பு முதல் பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு வரை! டாப் 10 நியூஸ்

TOP 10 NEWS: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கமல் எதிர்ப்பு முதல் பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு வரை! டாப் 10 நியூஸ்

Kathiravan V HT Tamil
Sep 21, 2024 02:07 PM IST

TOP 10 NEWS: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கமல் எதிர்ப்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு, நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு, ரவுடி ஆல்வின் சுட்டுப்பிடிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!

TOP 10 NEWS: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கமல் எதிர்ப்பு முதல் பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு வரை! டாப் 10 நியூஸ்
TOP 10 NEWS: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கமல் எதிர்ப்பு முதல் பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு வரை! டாப் 10 நியூஸ்

1.ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கமல் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்து நிறைந்த பேச்சு. இது எவ்வளவு பெரிய தவறு என்பது உலக அரசியலுக்கே தெரியும். இது இந்தியாவுக்கே தேவை இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேச்சு. 

2.21வயதாக குறைக்க கோரி தீர்மானம் 

தேர்தலில் இளைஞர்கள் அதிகம் பங்குபெறும் வகையில் இந்தியாவில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதை 25 வயதில் ரிஉந்து 21ஆக குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் பொதுக்குழுவில் தீர்மானம். 

3.முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு 

அதிமுக ஆட்சியில் 27 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏவுமான வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு. 

4.நடிகை பார்வதி நாயர் மீது வழக்கு 

தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு. முன்னாள் ஊழியர் சுபாஷ் அளித்த புகாரில் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

5.ரவுடி சுட்டுப்பிடிப்பு 

கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஆல்வின் என்ற ரவுடியை காவல்துறையினர் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். நள்ளிரவு 2.30 மணியளவில் கொடிசியா மைதானத்தில் பதுங்கி இருந்த ஆல்வினை பிடிக்க சென்ற போலீசாரை ஆல்வின் கத்தியால் தாக்கிய நிலையில் காவல்துறையினர் சுட்டுப்பிடித்ததாக தகவல்.

6.வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 

7.மருத்துவர் ராமதாஸ் கண்டிப்பு 

தமிழ்நாட்டில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின்படி, ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியும், அவமரியாதையும் சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் தொடர்கின்றன. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சரி செய்ய வேண்டிய தமிழக அரசு, அனைத்து அவமதிப்புகளையும், அநீதிகளையும் மூடி மறைக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து. 

8.அரசு மீது அன்புமணி விமர்சனம் 

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 இளைஞர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் 5,08,055 இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இந்த அளவுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் தொடர்பான ஐயங்களை பலமுறை கேட்டும் தமிழக அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து. 

9.போதை பொருள் தடுப்பு நடவடிக்கை 

அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் போதைப் பொருள் தடுப்பு குழு அமைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துமாறு தொழில்நுட்ப கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு, அரசு உதவி பெறும், தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 

10.புரட்டாசி முதல் சனிக்கிழமை 

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருமால் கோயில்களில் சிறப்பு வழிபாடு.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.