TOP 10 NEWS: 'மேகதாது அணை விவகாரம் முதல் நூடுல்ஸ் மரணம் வரை’ இன்றைய டாப் 10 செய்திகள்
சென்னையில் டி.கே.சிவக்குமார் பேட்டி, நூடுல்ஸ் மரணம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம், தமிழ்நாட்டில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Afternoon Top 10 news: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.சென்னையில் டி.கே.சிவக்குமார் பேட்டி
மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே அதிக பலன் கிடைக்கும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி. சென்னை மாநகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் 180 டன் காய்கறிக்கழிவு மற்றும் மாட்டுச்சாணம் மூலம் தினசரி 4000 மெட்ரிக் டன் பயோ கேஸ் தயாரிக்கப்படுகிறது.கர்நாடகாவில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சிவக்குமார் ஆய்வு செய்தார். மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார் இவ்வாறு கூறினார்.
2.வீட்டுமனை பட்டா வழங்கிய உதயநிதி
சென்னை திருவொற்றியூரில் 2000-க்கும் அதிகமானோருக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
3.கூட்டணி குறித்து நேரு பேச்சு
மக்களவை தேர்தலை போன்று சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமையும் சூழல் இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.
4.சீமான் வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்
சாதி பெயரை குறிப்பிட்டு பேசிய விவகாரத்தில் சீமான் மீது போடப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக சென்னை பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ் நியமனம்.
5.உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் வரும் செப்டம்பர் 5ஆம்தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகின்றது.
6.கோவை குற்றாலத்தில் குளிக்க அனுமதி
2 மாதங்களுக்கு பின்னர் கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல அனுமதி.
7.நூடுல்ஸ் மரணம் குறித்து மா.சு விளக்கம்
திருச்சி அருகே நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த நிலையில் காலாவதியான 800 கிலோ நூடுல்ஸ் பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.
8.வீராங்கனைக்கு முதலமைச்சர் வாழ்த்து
பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
9.கள்ளச்சாராய மரணம் குறித்து விசாரணை
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம், 2வது நாளாக காவல் துறையினரிடம் விசாரணை.
10.கார் ரேஸ்க்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு
சென்னையில் நடந்து முடிந்து உள்ள ஃபார்முலா - 4 கார் பந்தயத்தால் தமிழ்நாடு உலகம் முழுவதும் அறியப்படும் என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து.
டாபிக்ஸ்