TOP 10 NEWS: ரயில் விபத்து பகுதியில் NIA ஆய்வு முதல் வடகிழக்கு பருவமழை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ரயில் விபத்து பகுதியில் Nia ஆய்வு முதல் வடகிழக்கு பருவமழை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ரயில் விபத்து பகுதியில் NIA ஆய்வு முதல் வடகிழக்கு பருவமழை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Oct 12, 2024 02:07 PM IST

TOP 10 NEWS: திருவள்ளூர் கவரப்பேட்டை ரயில் விபத்து, ரயில்வேவுக்கு சு.வெங்கடேசன் கேள்வி, 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை, தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ரயில் விபத்து பகுதியில் NIA ஆய்வு முதல் வடகிழக்கு பருவமழை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ரயில் விபத்து பகுதியில் NIA ஆய்வு முதல் வடகிழக்கு பருவமழை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

1.15 மணி நேரத்தில் ரயில்கள் இயக்கம் 

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் சேதம் அடைந்த தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு இன்னும் 15 மணி நேரத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

2.ரயில் விபத்து குறித்து சு.வெ. கேள்வி 

ஆறுநாட்களுக்கு ஒரு ரயில் விபத்து நடந்து கொண்டு வருகின்றது. ஒவ்வொரு விபத்துகள் நடக்கும் போது நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே, ஆய்வின் முடிவுகளை வைத்துக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது யார்?, உயிர்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும், ஒவ்வொரு ரயில் பயணத்டையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே துறை என்னதான் செய்யப்போகிறது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி.

3.வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 

வங்கக்கடலில் வரும் அக்டோபர் 14ஆம் தேதி அன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

4.8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை 

கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 

5.பருவமழையை எதிர்கொள்ள தயார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பருவமழைக்கு முன்பாகவே அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள் கண்காணிக்கப்படுகின்றன. அவசரகால செயல்பாட்டு மையம் மூலம் தண்ணீர் தேங்கிய பகுதிகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி.

6.முதலமைச்சர் மீது வானதி விமர்சனம் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயுதபூஜைக்கு வாழ்த்து தெரிவிப்பதில் என்ன தயக்கம்? இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் முதலமைச்சர் தவிர்க்கிறார் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சனம். 

7.பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு 

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வரும் அக்டோபர் 14ஆம் தேதி அன்று கோவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார். 

8.தங்கம் விலை உயர்வு 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 56 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

9.திமுக அரசை சாடும் ராமதாஸ்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடும் என்று கூறி, பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 450&க்கும் கூடுதலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப் படும் என்று அறிவித்த திமுக அரசு, ஓய்வுபெற்றவர்களால் ஏற்பட்ட காலியிடங்களைக் கூட நிரப்ப மறுக்கிறது. குத்தகை முறை பணி நியமனங்களின் மூலம் இளைஞர்களை அடிமாட்டு ஊதியத்திற்கு பணியமர்த்துகிறது. தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அஞ்சி, உள்ளூர் மக்களுக்கு வேலை உத்தரவாதத்தை மறுக்கிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம். 

10.ரயில் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு 

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் தேசிய புலணாய்வு முகமை ஆய்வு.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.