Top 10 Tamil Nadu: உதயநிதியை பதவி விலக சொல்லும் பாஜக முதல் குப்பை கொட்டினால் ஏஐ வரை!இன்றைய டாப் 10!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 Tamil Nadu: உதயநிதியை பதவி விலக சொல்லும் பாஜக முதல் குப்பை கொட்டினால் ஏஐ வரை!இன்றைய டாப் 10!

Top 10 Tamil Nadu: உதயநிதியை பதவி விலக சொல்லும் பாஜக முதல் குப்பை கொட்டினால் ஏஐ வரை!இன்றைய டாப் 10!

Suguna Devi P HT Tamil
Oct 25, 2024 08:54 PM IST

தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 25) இரவு வரை நிகழ்ந்துள்ள நிகழ்வுகளின் டாப் 10 செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

Top 10 Tamil Nadu: Top 10 Tamil Nadu: உதயநிதியை பதவி விலக சொல்லும் பாஜக முதல் குப்பை கொட்டினால் ஏஐ வரை!இன்றைய டாப் 10!
Top 10 Tamil Nadu: Top 10 Tamil Nadu: உதயநிதியை பதவி விலக சொல்லும் பாஜக முதல் குப்பை கொட்டினால் ஏஐ வரை!இன்றைய டாப் 10!

பதவி விலகுவாரா உதயநிதி: அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதை அடுத்து தமிழகத்தை சேர்ந்த பாஜகவினர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஒன்றிய அமைச்சர் எல் முருகன் அவரது X பதிவில் ஆளுநர் ஆர்.என் ரவி நீ கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு அவரையே குற்றம் சாட்டினார். தற்போது உதயநிதி கலந்து கொண்ட விழாவில் இவ்வாறு தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதால் உதயநிதி பதவி விலகுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து உதயநிதி பதவி விலகுவாரா என தனது  எக்ஸ் தள பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

புயலுக்கு பின் மழை: அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தானா புயல் இன்று கரையை கடந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழை அல்லது அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தவெக மாநாட்டில் அதிகரித்த தலைவர்கள் கட்அவுட்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆயத்தப்பணிகள் விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக விக்கிரவாண்டி வி.சாலையில் உருவாகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுத் திடலில் தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர், சுதந்திரப்போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார், பெருந்தலைவர் காமராஜர், பெரியார், பி.ஆர். அம்பேத்கர், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

குப்பையை கொட்டினால் AI கேமரா: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை குறைக்க மாநாகரட்சி சார்பில் அபராதத் தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தாலும், குப்பை கொட்டுவதையும் எரிப்பதையும் தடுக்க முடியவில்லை. எனவே இதனை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் யார் குப்பையை கொட்டினார்கள் என்பதை துல்லியமாக கணிக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 

மாமியாரை கொலை செய்த மருமகள்: திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பீடி காலனியை சேர்ந்தவர் சம்சத், இவருக்கு 55 வயதாகிறது. இவருக்கு சிராஜ் என்ற மகனும் நிஷா என்ற மகளும் உள்ளனர். இவரது கணவர் அக்பர் அலி இறந்து விட்டார். சம்சத்தின மகன் சிராஜிற்கு ஆயிஷா பேகம் என்பவருடன் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.  நேற்று மாமியார் மருமகள் குடும்பத்தினர் அனைவரும் ஒடுகம்பட்டி தர்காவிற்கு சென்று மருமகளுக்கு கையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து இன்று காலை மாமியார், மருமகள் இடையே தகராறு நிலவி வந்தது. அப்போது தன்னுடைய கையில் இருக்கும் கயிறை கழட்டும்படி மாமியாரிடம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது மருமகள் ஆயிஷா கோபத்தில் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு மாமியார் சம்சாத் பேகத்தை இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதியில் இரு கத்திகளால் குத்தியுள்ளார். இதில் மாமியார் சம்சாத் பேகம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.ஆயிஷா பேகம் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இதற்காக மனநல ஆலோசகரிடம் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் நிறுவனங்களில் ரெய்டு: கோவையில் உள்ள பிரபல தொழிலதிபர்கள் வரதராஜன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த செவ்வாய்கிழமை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வரதராஜனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், அஸ்வின் பேப்பர் மில் உரிமையாளர் பாலசுப்பிரமணியமிற்கு சொந்தமான இடங்களில் 4வது நாளாக சோதனை தொடர்ந்து வருகின்றது.

அமைச்சர் பொன்முடி எழுதிய நூல் வெளியீட்டு விழா: தமிழ்நாட்டு வனத்துறை அமைச்சர் பொன்முடி “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலைவெளியிட்டார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நூலை பெற்றுக் கொண்டார். மேலும் நூல் வெளியீட்டு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை பள்ளியில் வாயு கசிவு: சென்னை திருவொற்றியூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் இருந்து வாயு கசிய வில்லை என காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது: விடுதலை கட்சி நடத்திய மது விலக்கு மாநாட்டில் கலந்து கொள்வோம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. இது போலி எனவும் இந்த அறிக்கை மீது நடவடிக்க எடுக்க வேண்டும் எனவும் விழுப்புரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். இந்நிலையில் இந்த புகார் மீதி எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு  சி.வி.சண்முகம் தரணாவில் ஈடுபட்டார். இதற்காக அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.