Tamil Top 10 News: ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் SI முதல் வானிலை அப்டேட் வரை - காலை டாப் 10 நியூஸ் இதோ..!
Tamil Top 10 News: ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் SI, கனமழைக்கு வாய்ப்பு, முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் உள்பட டாப் 10 முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
Morning Tamil Top 10 News:உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் SI
சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி ரோஹித் ராஜனை பெண் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுபிடித்துள்ளார். தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரோகித் ராஜன் தாக்கியதால் இரண்டு காவலர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மயிலாப்பூர் ரவுடி சிவக்குமார் கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ரோஹித் ராஜன்.
கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா
முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா ஆகஸ்ட் 17-ல் நடக்கிறது. இதில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமி, பாஜக மாநில தலைவர்அண்ணாமலை உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது.
மூச்சுத் திணறல் ஏற்பட்டு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!
சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சரவணன் (51). இவர் நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டுக்குச் சென்று இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சரவணனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரவணன் மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சிடைந்தனர். பின்னர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
டி.கே.சிவகுமார் உத்தரவு
கர்நாடகாவில் துங்கபத்ரா அணையின் மதகு உடைந்ததை தொடர்ந்து,பிற அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
புழல் ஏரிக்கு நீர்வரத்து178 கனஅடியாக அதிகரிப்பு. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2479 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம். 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 94 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறப்பு. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 311 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 15 கன அடியாக சரிவு.
நாட்டின் தலைச்சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம்!
நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் சென்னை அரசு மருத்துவகல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.
வங்கதேச அரசு வலியுறுத்தல்
ஒரு வாரத்துக்குள் அனைத்து சட்டவிரோத துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு போராட்டக்காரர்களை வங்கதேச அரசு வலியுறுத்தியுள்ளது.
அடுத்த ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெறும்?
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வந்த 33வது ஒலிம்பிக் போட்டி, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் இனிதே நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ம் ஆண்டு நடைபெற உள்ளது.
பிரதமர் மோதி கன்னியாகுமரியில் 45 மணி நேரம் தியானம் செய்த போது விடுப்பில் இருந்தாரா?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் இந்த ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 45 மணிநேரம் தியானம் செய்தார். அது நாடாளுமன்றத் தேர்தல் கடைசி கட்டத்தில் இருந்த நாட்கள். கன்னியாகுமரியில் பிரதமர் மோடி செலவிட்ட 45 மணி நேரம் அரசுப் பதிவேடுகளில் எப்படிப் பதிவாகியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்திடம் கேட்டிருந்தது. இந்த விண்ணப்பத்திற்குப் பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், பிரதமர் மோடி விடுப்பு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்..
செங்கல்பட்டு
சேலம்
திருவண்ணாமலை
காஞ்சிபுரம்
திருவாரூர்
நாகை
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்