Chennai: சென்னை மக்களே..முக்கிய அறிவிப்பு-இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai: சென்னை மக்களே..முக்கிய அறிவிப்பு-இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Chennai: சென்னை மக்களே..முக்கிய அறிவிப்பு-இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Divya Sekar HT Tamil
Jan 17, 2023 08:57 AM IST

Chennai special bus : சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி இன்று கடற்கரை பகுதிகள், சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக பொழுதை களிக்க உள்ளனர். எனவே போலீசார் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மாமல்லபுரம், கோவளம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து துறை வெளியிட்டு அறிவிப்பில், ”காணும் பொங்கலை முன்னிட்டு, எதிர்வரும் இன்று (ஜன 17) மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அண்ணா சதுக்கும், வண்டலூர் உயிரியல் பூங்கா. கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் கடற்கரை, குயின்ஸ் லேண்ட் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும்,18.01.2023 அன்று அதாவது நாளை அதிகாலை பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூரிலிருந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 125 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.