’போன மாதம் ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வாங்கலையா?’ ஆகஸ்டில் வாங்க அரிய வாய்ப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’போன மாதம் ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வாங்கலையா?’ ஆகஸ்டில் வாங்க அரிய வாய்ப்பு!

’போன மாதம் ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வாங்கலையா?’ ஆகஸ்டில் வாங்க அரிய வாய்ப்பு!

Kathiravan V HT Tamil
Aug 01, 2024 09:52 PM IST

ஜுலை 2024ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜுலை 2024 ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

’போன மாதம் ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வாங்கலையா?’ ஆகஸ்டில் வாங்க அரிய வாய்ப்பு!
’போன மாதம் ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வாங்கலையா?’ ஆகஸ்டில் வாங்க அரிய வாய்ப்பு!

துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் 

தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

சட்டமன்றத்தில் சொன்ன அமைச்சர்

ஜுன் 2024 ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜுன் 2024ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜுலை 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என சட்டமன்றத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. 

இன்னும் முழுமை பெறவில்லை 

அதன் அடிப்படையில் ஜுன் 2024ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுலை 2024ஆம் மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஜுலை 2024ஆம் மாதத்தில் சிறப்பு பொது விநியோகத்திட்டப் பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தினால் குடும்ப அட்டைதாரர்களால் ஜுலை 2024ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை. 

ஆகஸ்ட் முதல் பெற்றுக் கொள்ளலாம் 

ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜுலை 2024ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜுலை 2024 ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

ரேஷனில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு தட்டுப்பாடு

தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது என ஏற்கெனவே தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்து இருந்தது. 

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கிடைக்கவில்லை என்ற புகார் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்த பிரச்னையை கண்டறிந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளின் மூலம் வழங்கும் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி இருப்பில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொருட்களை கொள்முதல் செய்வதில் காலதாமதம் செய்யாமல் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அத்தியாவசித் தேவையை கவனத்தில் கொண்டு காலத்தே கொள்முதல் செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி இருந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.