Gram Sabha Meeting:கிராம சபை கூட்டம் - விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த தமிழக அரசு
நாளை நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டங்களில் விவசாயிகள் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.
நவம்பர் மாதம் 1ஆம் தேதி நாளை உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்த நிலையில் நாளை கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழக வேளாண் துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில், ”தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி நவம்பர் ஒன்றாம் தேதி நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களில் வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும்.
முக்கிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்குகின்ற வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன் துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு உபயோகிக்கப்படும்.
பல்வேறு திட்டங்களில் நடப்பு ஆண்டில் பயனடைந்த விவசாயிகளின் விவரங்கள் கிராம வாரியாக தயாரிக்கப்பட்டு அக்டோபர் இரண்டாம் தேதி என்று நடக்கும் கிராம சபை கூட்டத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
அக்டோபர் இரண்டாம் தேதி கேட்பின் வேளாண், உழவர் நலத்துறையில் திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விவரமும் நவம்பர் ஒன்றாம் தேதி என்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் . ஆகவே, கிராம சபை கூட்டங்களில் அனைத்து விவசாயிகளும் திரளாக பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.