TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?
TN 12th Result 2024: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி பெற்று மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ளார். அதன்படி, மொத்தம் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சிறிது அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44 சதவீதமும் மாணவர்கள் 92.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in போன்ற இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 97.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.