Thol. Thirumavalavan : அருண் கோயல் பதவி விலகல்; நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடைபெறுமா? – திருமா கேள்வி!
Thol. Thirumavalavan : நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் பதவி விலகியிருப்பதால், தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுமா என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருப்பது தேசிய அளவில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன நெருக்கடியில் இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. அவர் அச்சுறுத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக பதவி விலக கூறியுள்ளார்களா என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில், ஒரு ஆணையர் இல்லை. தலைமை தேர்தல் ஆணையரும், இவரும் மட்டும்தான். இப்போது இவரும் பதவி விலகியுள்ள நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே இருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவிக்க உள்ள நிலையில் இப்படி பதவி விலகியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவும் அதன் ஆதரவு சக்திகளும் தேர்தல் முறையை சீரழித்து, முறைகேடான முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன என்பதைத்தான் தேர்தல் ஆணையத்தில் நடக்கும் இந்த நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன.