Theni Teacher: மாணவர்கள் புத்தகத்தை எடைக்கு போட்ட தலைமை ஆசிரியர் சஸ்பென்ட்!
Theni district Kamarajapuram Headmaster suspended for selling old books to students: அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பள்ளியில் நடந்த இந்த அவலம் குறித்து பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
மாணவர்களின் பாடப்புத்தகங்களை விற்பனை செய்த பெண் தலைமையாசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்து தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். என்ன நடந்தது தேனியில்?
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேற்குத்தொடர்ச்சியில் உள்ளது மலைக்கிராமமான காமராஜபுரம் . இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அப்பள்ளியின் தலைமையாசிரியையான ஈஸ்வரி, மலைகிராம பள்ளி என்பதால், தன் இஷ்டத்திற்கு செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் ஆய்வுக்கு அப்பாற்பட்ட பள்ளியாக இருந்ததால், தான் நினைத்ததை அரங்கேற்றி வந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக பள்ளியில் உள்ள ஒரு அறையில், மாணவர்களின் பாடப்புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருந்த அந்த புத்தகங்கள் குறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லாத ஈஸ்வரி, அவற்றை தனது விருப்பத்திற்கு பள்ளி வைத்து எடைக்கு விற்றுள்ளார்.
2500 ரூபாய்க்கு அந்த புத்தகங்கள் விற்கப்பட்ட நிலையில், பள்ளியில் வைத்தே, அந்த புத்தகங்களை எடைக்கு போட்ட தலைமையை ஆசிரியரின் செயலை, ஒருவர் வீடியோ எடுத்து அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார்.
அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பள்ளியில் நடந்த இந்த அவலம் குறித்து பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து அந்த வீடியோவின் அடிப்படையில் விசாரணை நடத்த தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கலாவதி உத்தரவிட்டார்.
விசாரணையில் தலைமையாசிரியை ஈஸ்வரியை புத்தகங்களை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை ஈஸ்வரியை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கலாவதி உத்தரவிட்டார்.
மாணவர்களின் புத்தகங்களை தலைமை ஆசிரியை எடைக்குப் போட்டு விற்ற சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .