2023 Holiday List : 2023ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு!
2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் , மகாவீர் ஜெயந்தி ஆகியவற்றிற்கான பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தைப்பூசத்தை ஒட்டி வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி பொது விடுமுறை ஆக விடப்படுகிறது. மொத்தமுள்ள 24 நாட்களில் தமிழ் புத்தாண்டு, பொங்கல் , புனித வெள்ளி, ரம்ஜான் , கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி என விடுமுறை நாட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
தீபாவளி உள்ளிட்ட பெரும்பாலான விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன .
திருவள்ளுவர் தினம், மே தினம், ஆயுத பூஜை , காந்தி ஜெயந்தி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் திங்கட்கிழமையில் வருகின்றன. செவ்வாய்க்கிழமை உழவர் திருநாள் ,மகாவீர் ஜெயந்தி, சுதந்திர தினம் ,விஜயதசமி ஆகியவையும் , புதன்கிழமைகளில் தெலுங்கு வருடப்பிறப்பு, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகையும், வியாழக்கிழமை குடியரசு தினம் ,பக்ரீத் ,மிலாது நபி ஆகிய பண்டிகைகளும் வருகின்றன.
வெள்ளிக்கிழமைகளில் புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சனிக்கிழமைகளில் ரம்ஜான், மொகரம் உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன.