தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime : சென்னையில் கொடூரம்.. வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய தம்பி.. அக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசார் தீவிர விசாரணை!

Crime : சென்னையில் கொடூரம்.. வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய தம்பி.. அக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசார் தீவிர விசாரணை!

Divya Sekar HT Tamil
Jun 22, 2024 08:26 AM IST

சென்னை திருவொற்றியூரில் தாய் தம்பியை கொலை செய்து விட்டு உறவினர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொடூரம்.. வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய தம்பி.. அக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசார் தீவிர விசாரணை!
சென்னையில் கொடூரம்.. வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய தம்பி.. அக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசார் தீவிர விசாரணை!

தப்பி ஓடி கடற்கரையில் படகில் உறங்கிக் கொண்டிருந்த கொலையாளியை துணை ஆணையர் பணி படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

தாய் தம்பியை கொன்ற மகன்

சென்னை திருவொற்றியூர் திருநகர் சேர்ந்தவர் பத்மா(45). அக்குபஞ்சர் மருத்துவரர் ஆவர். இவரின் கணவர் முருகன் ஓமன் நாட்டில் டிரைவராக பணியாற்றி வருகிறார். தனியார் கல்லூரியில் மூத்த மகனான நித்திஷ் பிஎஸ்சி படித்து வருகிறார். இவரின் இரண்டாவது மகன் சஞ்சய் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நித்திஷ் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில். பெரியம்மாவின் மகளான அக்காள் மகாலட்சுமி வீட்டிற்கு சென்று தன்னுடைய பையில் செல்போன், வீட்டின் சாவி ஆகியவற்றை வைத்துவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார்.

வாய்ஸ் மெசேஜ்களை பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி

இந்த நிலையில் நேற்று மகாலட்சுமி நிதீஷ் செல்போனை ஆன் செய்து பார்த்தபோது அதில் அவர் சில வாய்ஸ் மெசேஜ்களை வைத்துள்ளார். அதில் தனது அம்மாவையும் தம்பியையும் தான் கொலை செய்து விட்டதாக வாய்ஸ் மெசேஜ் இருந்துள்ளது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி மகாலட்சுமி தனது சித்தியான பத்மாவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். உள்ளே இருந்து சென்ற போது அங்கே பத்மாவின் உடலும் 14 வயதான சஞ்சய் உடலும் கொலை செய்யப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்

உடனடியாக இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார் மகாலட்சுமி. இரவு பணியில் இருந்த புது வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் கிருஷ்ணராஜ் வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் தனிப்படையினர் ரித்தீஷ்யை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது நிதீஷ் குப்பம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் உள்ள பழுதடைந்த கப்பலில் போதையில் படுத்து உறங்கி இருப்பது தெரியவந்தது.

போலீசார் தீவிர விசாரணை

அவரை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் கைது செய்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். நித்திஷ் எந்த காரணத்திற்காக தன் தாயையும் தம்பியையும் கொன்றார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற மகனே தாய் மற்றும் தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்