தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi : 'கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி' மா. சுப்பிரமணியன்

Kallakurichi : 'கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி' மா. சுப்பிரமணியன்

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 21, 2024 05:53 PM IST

Kallakurichi : கடந்த 2001 இல் ஜெயலலிதாவை பதவி விலக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிச்சாமி மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் என்று மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார்.

'கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி' மா. சுப்பிரமணியன்
'கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி' மா. சுப்பிரமணியன்

Kallakurichi : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையல் சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நேரில் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு வர தயங்கியதால் தான் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்ரமணியன் கூறியதாவது,

கடந்த ஆண்டு மரக்காணத்தில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் சிபிசிஐடிதான் விசாரித்தது. இரண்டு மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட அந்த விவகாரத்தில் 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். எட்டு பேர் குண்டத்தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன. 16 காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எல்லா கட்சிகளுக்கும் குற்றம் சாட்ட உரிமை உள்ளது. அதே சமையம் ஒரு ஆட்சிக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் .

ஜெயலலிதா ஆட்சியில் 53 பேர் பலி

கடந்த இரு ஆண்டுகள் மட்டுமல்ல என்னிடத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே நடைபெற்ற இதுபோன்ற கள்ளச் சாராய சாவுக்களின் பட்டியல் உள்ளது. 2001ல் ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 53 பேர் உயிரிழந்தனர். 200 பேரின் பார்வை பறிபோனது. ஆனால் இதை போல் ஏட்டிக்கி போட்டி என்று நான் சொல்ல வரவில்லை. குஜராத்தில் மட்டும் கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் எட்டு, ஒன்பது சம்பவங்கள் நடந்துள்ளது ஒவ்வொரு முறையும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த மாநில முதல்வர்களை எல்லாம் யாரும் பதவி விலக சொல்லவில்லை.

ட்ரெண்டிங் செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி மோசமான அரசியல்

கடந்த 2001 இல் ஜெயலலிதாவை பதவி விலக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிச்சாமி மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் என்று மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி நகரத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்து உள்ளது. பாண்டிச்சேரி ஜிம்பர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு பொது மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மருத்துவமனை, சேலம் அரசு பொது மருத்துவமனைகளில் 96 பேர் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வந்து உள்ளன. 146 பேர் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதாகவும், அதில் 50 பேர் இறந்து உள்ளதாகவும், எஞ்சியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. அதில் பலர் கவலைக்கிடமாகவும், பலருக்கு கண்பார்வை தெரியவில்லை என்றும் செய்திகள் வந்து உள்ளன.

எம்.எல்.ஏவாக இருக்கவே அர்த்தம் இல்லாமல் போய்விடும்

இது குறித்து சட்டமன்றத்தில் பேச பேரவை தலைவரிடம் அனுமதிகேட்டோம் ஆனால் பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். இது நாட்டையே உலுக்கும் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம். மக்கள் கொதித்து போய் இருக்கும் இந்த சம்பவம் குறித்து கூட சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு இல்லை என்றால் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

திறமையற்ற முதலமைச்சர்

இது ஹிட்லர் ஆட்சி போல் சர்வாதிகார ஆட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் குரல் சட்டமன்றத்தில் எதிரொளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்.

போதை மற்றும் கள்ளச்சாராய தடுப்பு குறித்து பலமுறை முதலமைச்சர் கூட்டம் போட்டு நடத்தியும், ஏன் கள்ளச்சாராய மரணம் நிகழ்கிறது. திறமையற்ற அரசாங்கம், திறமையற்ற முதல்வர் இவர். என கடுமையாக விமர்சித்தார்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9