Aavin Butter Price Increased:ஆவினில் நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aavin Butter Price Increased:ஆவினில் நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!

Aavin Butter Price Increased:ஆவினில் நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!

Divya Sekar HT Tamil
Dec 17, 2022 10:56 AM IST

தமிழகத்தில் பால், நெய் தொடர்ந்து வெண்ணெய் விலையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது

வெண்ணெய் விலையும் உயர்வு
வெண்ணெய் விலையும் உயர்வு

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், பால்கோவா, மைசூர் பாக்கு, குலாப் ஜாமுன், ரசகுல்லா உள்ளிட்ட 235 வகையான பால் உப பொருட்களை தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

இந்த சூழலில் ஆவின் நிறுவனத்தின் பிரிமியம் நெய் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூபாய் 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு நேற்று வெளியாகியது. இதன் மூலம் நடப்பாண்டில் மட்டும் ஆவின் நெய் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டது.

ஆவின் நெய் விலை உயர்வை கண்டித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய் விலையையும் இன்று ஆவின் நிர்வாகம் அதிகரித்து உள்ளது. உப்பு கலக்காத அரை கிலோ வெண்ணையின் விலை ரூபாய் 250 இல் இருந்து 260 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் 100 கிராம் வெண்ணையின் விலை 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு கலந்த வெண்ணெய் 100 கிராம் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் 255 ரூபாயிலிருந்து 265 ரூபாயாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் நெய் நேற்று விலை உயர்ந்த நிலையில் இன்று வெண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் பால், நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வெண்ணெய் விலையும் உயர்வு
வெண்ணெய் விலையும் உயர்வு

நெய்யின்புதிய விலை உயர்வின் படி, ஒரு லிட்டர் நெய் ரூ.580ல் இருந்து, ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 5 லிட்டர் நெய், 2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாகவும், 500 மி.லி நெய் ரூ. 290ல் இருந்து 315 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

200 மி.லி., ரூ.130ல் இருந்து 145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விலையேற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.