Senthil Balaji: ’கைது ஆவணங்களை செந்தில் பாலாஜி வாங்க மறுத்தது ஏன்?’ என்.ஆர்.இளங்கோவுக்கு நீதிபதி சரமாரி கேள்வி
கைதுக்கான ஆவணங்களை அமலாக்கத்துறை கொடுத்த போது அதை ஏன் செந்தில் பாலாஜி வாங்கவில்லை என்று மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்பினார்.
கைதுக்கான ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கியபோது அதை செந்தில் பாலாஜி ஏற்க மறுத்தது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்தை மீறி கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பினை இரண்டு நீதிபதிகள் அமர்வு கடந்த ஜூலை 4ஆம் தேதி வழங்கியது.
தற்போது இந்த வழக்கின் மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டு வருகிறார். இன்று காலை மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதம் செய்த நிலையில் பிற்பகலில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம் செய்து வருகிறார்.
கைது மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக இருந்தால் அதை கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற காவலில் வைக்க கூடாது. அவ்வாறு இருந்தால் அதனை சட்டவிரோதமான காவலாகத்தான் கருதப்பட வேண்டும் என்ற வாதத்தை என்.ஆர்.இளங்கோ முன் வைத்தார்.
கைதுக்கான ஆவணங்களை அமலாக்கத்துறை கொடுத்த போது அதை ஏன் செந்தில் பாலாஜி வாங்கவில்லை என்று மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்பினார்.
அதே சமயம் அமலாகக்த்துறை கைது நடவடிக்கை தவறு என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுக்க உங்களுக்கு உரிமை இருக்கும் போது ஏன் கைது வாரண்டை பெறவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
டாபிக்ஸ்