Leopard Death : சேலத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.. முன்னாள் பாமக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேர் கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Leopard Death : சேலத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.. முன்னாள் பாமக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேர் கைது!

Leopard Death : சேலத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.. முன்னாள் பாமக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேர் கைது!

Divya Sekar HT Tamil
Oct 01, 2024 03:12 PM IST

Salem Leopard Death : சேலத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் பாமக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leopard Death : சேலத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.. முன்னாள் பாமக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேர் கைது!
Leopard Death : சேலத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.. முன்னாள் பாமக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேர் கைது!

இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை சின்னப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட போது சிறுத்தை உயிரிழந்து இருந்ததை பார்த்து வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில் சிறுத்தை துப்பாக்கியால் சுடப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் முன்னாள் பாமக ஊராட்சி மன்ற தலைவரும் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான முனுசாமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த சசி ராஜா ஆகிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர், பாலமலை, எடப்பாடி, காடையாம்பட்டி பகுதியில் உள்ள சேர்வராயன் மலைத்தொடரை ஒட்டிய பகுதியில்,‌ கடந்த 6 மாதத்திற்கும் மேலாக ஒரு சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த சிறுத்தை, கடந்த 3 மாதமாக மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய், கோழிகளை வேட்டையாடி வந்தது.

10 கோழிகளையும், 5 நாய்களையும் அந்த சிறுத்தை வேட்டையாடியுள்ளது

குறிப்பாக, கடந்த 20 நாட்களாக மேட்டூர் பாலமலையை ஒட்டியிருக்கும் கொளத்தூர், குரும்பனூர், வெள்ளக்கரட்டூர், புதுவேலமங்கலம், கருங்கரடு உள்ளிட்ட பகுதியில் பதுங்கியிருந்து, இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடியது. மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை ஆகிய பகுதியில் இதுவரை 15க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளையும், 10 கோழிகளையும், 5 நாய்களையும் அந்த சிறுத்தை வேட்டையாடியுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் கெங்கவல்லிக்கு உட்பட்ட எடப்பாடி கிராமத்தில் கன்றுக்குட்டி வனவிலங்கால் வேட்டையாடப்பட்டு உயிரிழந்தது.

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் எடப்பாடி வன கிராமத்தில் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் சிறுத்தை தாக்கியதில் கன்று உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

ஏற்கெனவே, மேட்டூரில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், சேலம்-பெரம்பலூர் எல்லையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலை அடுத்து, வனத்துறை அதிகாரிகள் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

12 சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணிப்பு

மேலும், மேட்டூரில் சிறுத்தையை பிடிக்க கொண்டு வந்திருந்த கூண்டை, எடப்பாடி கிராமத்துக்கு வனத்துறை அதிகாரிகள் கொண்டு வந்து, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் 12 சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணிப்புப் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.