R.N.Ravi: ‘உரையில் தவிர்த்த வார்த்தைகள், கொதித்த திமுகவினர், வெளியேறிய ஆளுநர்’
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  R.n.ravi: ‘உரையில் தவிர்த்த வார்த்தைகள், கொதித்த திமுகவினர், வெளியேறிய ஆளுநர்’

R.N.Ravi: ‘உரையில் தவிர்த்த வார்த்தைகள், கொதித்த திமுகவினர், வெளியேறிய ஆளுநர்’

Divya Sekar HT Tamil
Jan 09, 2023 12:34 PM IST

TN Legislative Assembly 2023: சட்டப்பேரவையில் அரசின் உரையில் பல பகுதிகளை தவிர்த்தற்கு முதல்வர் கண்டனத்தை அடுத்து ஆளுநர் ஆர்.என். ரவி பாதியிலேயே வெளியேறினார்.

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி

அப்போது சமூகநீதி , சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65 ஆவது பத்தியை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்றுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் தவிர்த்த அந்த பகுதியில், ”சமூக நீதி ,சுயமரியாதை ,அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சமத்துவம் ,பெண்ணுரிமை, மத நல்லிணக்கம் , பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.

தந்தை பெரியார் ,அண்ணல் அம்பேத்கர் ,பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது” என்ற பத்தியில் உள்ள தலைவர்களின் பெயர்களையும் அவர் முழுமையாக தவிர்த்து விட்டார்.'அமைதி பூங்கா தமிழ்நாடு' என்ற வாக்கியத்தையும் உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்துள்ளார்

இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதல்வர் தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. 

உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது.சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார்.

அச்சிடப்பட்டது இல்லாமல் ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் கண்டனத்தை தொடர்ந்து ஆளுநர் ரவி அவையை விட்டு வெளியேறினார்

ஆளுநர் வெளியேறிய போது தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.