Warning: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி உயர்வு: முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி உயர்ந்துள்ள நிலையில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் நண்பகல் 2 மணிநேர நிலவரப்படி 136 அடியை எட்டியுள்ளது. அதனைத்தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாரல் மழைப் பெய்து வருகிறது. அதேபோல், முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான குமுளி, லோயர் கேம்ப், தேக்கடி ஆகியப் பகுதிகளில் கனமழைப் பெய்து வருகிறது.
அதன்படி, முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம், நண்பகல் 2 மணி நிலவரப்படி, 136 அடிக்கு இன்றைய நிலவரப்படி உயர்ந்துள்ளது.
அதனையொட்டி, முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்