Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை! ஒத்துழைப்பு கொடுக்க தயார் என அறிவிப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை! ஒத்துழைப்பு கொடுக்க தயார் என அறிவிப்பு

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை! ஒத்துழைப்பு கொடுக்க தயார் என அறிவிப்பு

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 13, 2023 10:31 AM IST

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

<p>மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி</p>
<p>மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி</p>

கரூர் ராமேஸ்வர பட்டினத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசித்து வரும் அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அண்மையில் 9 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தகவல் இல்லை‘

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, "நடைபயற்சிக்கு சென்றபோது தான் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது தெரிந்தது. வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். இப்போது நான் வாக்கிங் சென்ற போது தகவல் கிடைத்த உடன் விரைந்து வந்தேன். 
என்ன நோக்கத்தில் வந்துள்ளனர். எந்த தேவைக்காக வந்துள்ளனர் என்று தெரியவில்லை. பார்ப்போம் சோதனை முடியட்டும். மேலும் வருமான வரித்துறை சோதனைக்கும் அமலாக்கத்துறை சோதனைக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளார். அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதனால் தற்போது நான் செல்கிறேன்.  வருமான வரித்துறையாக இருந்தாலும், அமலாக்கத்துறையாக இருந்தாலும் எந்த சோதனைக்கும் நாங்கள் தயார். அந்த ஆவணங்களை கைப்பற்றி விளக்கம் கேட்டாலும் விளக்கம் கொடுக்க நாங்கள் தயார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.