Rain Water Drainage : மழை நீர் வடிகால் பணியை நேரில் ஆய்வு செய்த இறையன்பு !
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் 29 இடங்களில் 89 கோடி செலவில் மழை நீர் வடிகால்கள் அமைக்கும் திட்டப் பணிகளை தலைமை செயலர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் 29 இடங்களில் 89 கோடியே 64 லட்சம் செலவில் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பணிகள் நடைபெற உள்ள இடங்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
தாம்பரம் மாநகராட்சியில் உள்ள அம்பாள் நகர், திருமலை நகர், வள்ளல் யூசுப் நகர் பகுதிகளில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். பின்னர், நிரந்தர தீர்வு காண தயாரிக்கப்பட்டுள்ள திட்ட மதிப்பிற்கு உரிய அனுமதி பெற்று பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் உட்பட மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
டாபிக்ஸ்