கொங்கு மண்டலத்தில் 4 நாள்கள் சுற்று பயணம் மேற்கொள்ளும் முதல்வர் !
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கொங்கு மண்டலத்தில் 4 நாள்கள் சுற்று பயணம் மேற்கொள்ளும் முதல்வர் !

கொங்கு மண்டலத்தில் 4 நாள்கள் சுற்று பயணம் மேற்கொள்ளும் முதல்வர் !

Divya Sekar HT Tamil
Aug 19, 2022 03:46 PM IST

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை 4 நாட்கள் கொங்குமண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

<p>முதல்வர் ஸ்டாலின்</p>
<p>முதல்வர் ஸ்டாலின்</p>

இதற்காக வருகிற 23ஆம் தேதி மாலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அன்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் மறுநாள் காலை 10 மணிக்கு கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

அங்கு 1 லட்சத்து 6 ஆயிரத்து 641 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரையாற்றுகிறார். தொடர்ந்து முடிவுற்ற 226 திட்ட பணிகளையும் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் 261 புதிய திட்டங்களையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். அரசு விழா முடிந்ததும் நேராக பொள்ளாச்சி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு மாலையில் தி.மு.க. கட்சி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அப்போது ஏராளமான மாற்றுக்கட்சியினர் முதல்வர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளனர். கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்வர் 25ஆம் தேதி திருப்பூர் செல்கிறார். அன்று காலை திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார்.

அப்போது தமிழ்நாடு கயிறு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் குண்டடம், கரூர் பகுதிகளில் அமைய உள்ள கயிறு தொழில் குழுமங்களுக்கான அரசாணை, தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு உதவிகள், கயிறு சார்ந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். நிகழ்ச்சிகள் முடிந்ததும், முதல்வர் அன்று மாலை திருப்பூரில் இருந்து கார் மூலம் ஈரோட்டிற்கு செல்கிறார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். மேலும் அதன் அருகே அமைக்கப்பட்ட படிப்பகத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

பின்னர் ஈரோடு செல்லும் அவர் அன்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் 26ஆம் தேதி காலை ஈரோட்டில் நடக்கும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

ஈரோட்டில் நிகழ்ச்சிகள் முடிந்ததும், அங்கிருந்து அவர் கார் மூலம் கோவைக்கு வருகிறார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பவள விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். பின்னர் அவர் தனது 4 நாள் பயணத்தை முடித்து கொண்டு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.