Top 10 Tamil Nadu:அஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதியை விமர்சித்த தமிழிசை முதல் சீமானுக்கு எதிராக பசும்பொன்னில் முழக்கம்
அக்டோபர் மாதம் 30 ஆம் தேதியான இன்று இரவு வரை தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இன்றைய டாப் 10 செய்திகளாக இங்கு பார்க்கலாம்.

அஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதியை விமர்சித்த தமிழிசை: ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஆளுநர் தமிழிசை, "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஜித்துக்கு வாழ்த்து கூறியுள்ளார். அஜித்துக்கு வாழ்த்து கூறினால் விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் அஜித்திற்கு வாழ்த்து கூறியுள்ளாரா என்று எனக்கு தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
தீபாவளி எதிரொலி - அதிகரித்த பூக்கள் விலை
தீபாவளி பண்டிகையை ஒட்டி பூசந்தைகளில் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி பிச்சிப்பூ கிலோ ரூ.1250க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.1500க்கும், அரளிப்பூ கிலோ ரூ.250க்கும், வாடாமல்லி கிலோ ரூ.20க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.100க்கும், சம்பங்கி கிலோ ரூ.500க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.600க்கும், ரோஸ் கிலோ ரூ.250க்கும் விற்பனையாகிறது.
பசும்பொன்னில் சீமானுக்கு எதிராக முழக்கம்
பசும்பொனில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவதற்காக சென்ற நாம் தமிழர் கட்சி சீமானை சீமானுக்கு எதிராக இளைஞர்கள் பலர் கோசமிட்டனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அனைவரையும் பாண்டியர்கள் என குறிப்பிடுவதால் ஆத்திரமடைந்து கத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
