TN Assembly: ’வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 1900 கோயில்களுக்கு குடமுழுக்கு!’ பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!
Tamil Nadu Assembly Meeting: இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள், 1900 திருக்கோயில்கள் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்ட உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறி உள்ளார்.
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 1900 கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
மானியக்கோரிக்கை விவாதம்
இந்த நிலையில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மானியக்கோரிக்கை
இன்றைய தினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, கூட்டுறவு துறை, உனவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் நடைபெறுகின்றது. இந்த விவாதங்களில் பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்.காந்தி, பெரிய கருப்பன் உள்ளிட்டோர் பதில் அளித்து பேச உள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் கேள்வி
இன்றைய தினம் சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ அசோக் குமார், பேராவூரணி தொகுதியில் உள்ள புராதனவனேஸ்வரர், பெரியநாயகி அம்மன் கோயில் ஆனது பாண்டிய மன்னனிடம் சிவபெருமான் தோன்றி பேசியதாக வரலாறு உண்டு. இந்த கோயிலுக்கு திருமண மண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பக்தர்கள் பயன்பாடு, திருமணங்களுக்கு ஏற்ற ஸ்தலங்களில், இதுவரை 97 திருமண மண்டபங்கள் சுமார் 350 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு திருமண மண்டபம் வேண்டும் என்றால், முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அசோக் குமார் எம்.எல்.ஏ, பேராவூரணியில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியன் திருக்கோயில், திருவோணம் ஒன்றியத்தில் உள்ள சென்னியம்மன் கோயிலில் குடமுழக்கு நடத்தவும், சேதுவாசமுத்திரம் ஒன்றியத்தி உள்ள கதளி வனேஸ்வரர் கோயிலில் திருமண மண்டபம் மற்றும் கொடிமரம் வழங்கவும் அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.
1900 கோயில்களுக்கு குடகுழுக்கு
இதற்கு பதில் அளித்து பேசிய, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அவர் கோரிய கதளி வனேஸ்வரர் திருக்கோயில், வீரமாகாளி அம்மன் திருக்கோயில், சென்னியம்மன் திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும், குடமுழுக்கு, திருமண மண்டபங்களுக்கு விரைவில் பணிகள் எடுத்துக் கொண்டு பணிகள் நிறைவேற்றப்படும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள், 1900 திருக்கோயில்கள் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்ட உள்ளது என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்