Tamil Top 10 news: பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு தேசிய விருது உள்ளிட்ட டாப் 10 செய்திகள்
Afternoon Top 10 news: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
Afternoon Top 10 news: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
70வது தேசிய திரைப்பட விருதுகள்: 2022-ன் சிறந்த தமிழ்ப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்: பாகம் 1' தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. சிறந்த பின்னணி இசையமைப்பாளராக பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒளி, ஒலி வடிவமைப்பு என மொத்தம் 4 விருதுகளுக்கு பொன்னியின் செல்வன் படம் தேர்வாகி உள்ளது. தமிழில் சிறந்த நடிகையாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடனத்திற்காக திருச்சிற்றம்பலமம் படத்தில் பணியாற்றி ஜானி மாஸ்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த கன்னட திரைப்படமாக கே.ஜி.எப் 2, சிறந்த மலையாள திரைப்படமாக சவுதி வெள்ளைக்கா படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் வன்கொடுமை : பந்திற்கு அழைப்பு விடுத்த மம்தா
Kolkata Doctor: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகஸ்ட் 17ஆம் தேதி பந்திற்கு அழைப்பு விடுத்தார். மேலும், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஈ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள்
ISRO: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 3-வது மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. செயற்கைக்கோள் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, எஸ்.எஸ்.எல்.வி.யின் வளர்ச்சி நிறைவடைந்ததாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் அறிவித்தார்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
Gold Rate : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் இன்று (ஆகஸ்ட் 16) சவரனுக்கு ரூ.80 உயரந்து ரூ.52,520-க்கு விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.6,565க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று (ஆகஸ்ட் -16 ) கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனையாகிறது.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம்
ADMK : ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான திட்டங்களை அறிவிக்காததை கண்டித்து அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுக அவசர செயற்குழுவில் மொத்தம் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழுவில் 9 தீர்மானங்கள் மற்றும் 2 சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும், மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்தக் கோரி அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6 மணி நேரத்திற்குள் FIR
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 5 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளை துரத்தி கடித்த வெறிநாய் 7 குழந்தைகள் காயம்
கடலூர் மாவட்டம் பனையாந்தூர் கிராமத்தில் இன்று காலை வெறிநாய் ஒன்று குழந்தைகளை துரத்தி துரத்திக் கடித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இந்தில் 7 குழந்தைகள் உட்பட 10பேர் காயம் அடைந்துள்ளனர்.
விடாமுயற்சி அப்டேட்
புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது இந்த போஸ்டரில் நடிகர் நிகில் மேனனின் தோற்றம் இடம்பெற்று உள்ளது
தங்கலான் படத்தின் முதல்நாள் வசூல்
நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. இந்நிலையில் முதல் நாளில் உலகம் முழுவதும் 26.44 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி , கோவை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
டாபிக்ஸ்