மீண்டும் வெளிநாட்டுக்கு பறக்கும் முதல்வர்! விரைவில் அமெரிக்கா செல்கிறார்! பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மீண்டும் வெளிநாட்டுக்கு பறக்கும் முதல்வர்! விரைவில் அமெரிக்கா செல்கிறார்! பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

மீண்டும் வெளிநாட்டுக்கு பறக்கும் முதல்வர்! விரைவில் அமெரிக்கா செல்கிறார்! பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

Kathiravan V HT Tamil
Jun 28, 2024 04:13 PM IST

TN Assembly 2024 Live: இந்த பயணத்தில் தமிழ்நாட்டில் தடம்பதிக்காத முக்கிய தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்போம் என்று சட்டப்பேரவையில் தொழில் மற்றும் முதலீடுகள் ஊக்குவிப்புத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார்.

மீண்டும் வெளிநாட்டுக்கு பறக்கும் முதல்வர்! விரைவில் அமெரிக்கா செல்கிறார்! பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!
மீண்டும் வெளிநாட்டுக்கு பறக்கும் முதல்வர்! விரைவில் அமெரிக்கா செல்கிறார்! பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மானியக் கோரிக்கை விவாதம்

இன்றைய தினம் சிறு குறு நடுத்தர தொழில்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை, மதுவிலக்கு, காவல்துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பதில் அளித்து பேசி புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

தொழில் மற்றும் முதலீடுகள் ஊக்குவிப்புத் துறை மானியக்கோரிக்கை விவாதம் 

சட்டப்பேரவையில் தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

அதில்,  சுழற்பொருளாதார அடிப்படையாகக் நிறுவனங்களை சூழலமைப்பை தொழில் வகையில், கொண்ட ஊக்குவிக்கும் அவைகளுக்கு கட்டமைக்கப்பட்ட ஊக்கச் சலுகைகள் அளித்து, அத்துறையில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையிலும், தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாடு சுழற்பொருளாதாரக் I கொள்கை வெளியிடப்படும். அந்நிறுவனங்கள், நிலையான நடைமுறைகள் தொழில்நுட்ப தீர்வுகள் மதிப்பு கூட்டப்பட்ட மறுசுழற்சி மற்றும் புத்துருவாக்கம் ஆகியவற்றில் முதலீடுகள் மேற்கொள்வதை இந்தக் கொள்கை ஊக்குவிக்கும்.

பொம்மைகள், பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறையில் பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகிட வாய்ப்பு உள்ளது. இத்துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்திடவும். அதற்கு உகந்த சூழலமைப்பினை மேம்படுத்தவும். சிறப்பு சலுகைகள் வெளியிடப்படும். கொண்ட ஒரு திட்டம்

வடிவமைப்பு, கலை, கலாச்சாரம் மற்றும் கேளிக்கை தொடர்பான படைப்பாற்றல் மிக்க தொழில்களை அடையாளம் கண்டு, அத்துறைகள் சார்ந்த தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் தீட்டுவதற்கான ஒரு செயல் திட்ட வரைபடம் வெளியிடப்படும். இதன் மூலம், படைப்பு திறன் (creativity) மற்றும் திறன்மிகு வேலைவாய்ப்புகளுக்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ள பொருளாதாரத் துறைகளில் பெருமளவில் முதலீடுகளை ஈர்த்திட இயலும்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு பரவலாக ஆதரவு சேவைகள் வழங்குவதற்கும் இந்நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்வதற்கும். மேலும் தொழிலகங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களுடன் இணைந்து கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வழிகாட்டி நிறுவனத்தின் கிளை அலுவலகம் கோயம்புத்தூரில் தொடங்கப்படும்.

அதிகளவிலான ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன. உயர்தொழில்நுட்ப இந்நிறுவனங்களுக்குத் சேவைகளை வழங்குவதற்கும், தேவையான ஜப்பானிய நிறுவனங்களின் முதலீடுகளை மேலும் பெருமளவில் தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கும். டோக்கியோவில் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு அமைவு (Japan Desk) வழிகாட்டி நிறுவனம் மூலம் உருவாக்கப்படும்.

சுற்றுலாத் துறையில், புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், இத்துறையில் முதலீடு மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து ஆதரவுச் சேவைகள் அளித்திடவும், திட்டங்களை செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதை தொடர்ச்சியாக கண்காணித்திடும் வகையிலும், வழிகாட்டி நிறுவனத்தில் ஒரு சிறப்பு அமைப்பு (சுற்றுலா முதலீட்டு ஊக்குவிப்புக்கான சிறப்புப் பிரிவு & Facilitation) ஏற்படுத்தப்படும். இத்துறையில் முதலீடுகளை ஈர்த்திடும் வகையிலும், மாநிலத்தில் புதிய மற்றும் ஏற்கனவே சிறந்து விளங்கிடும் சுற்றுலாத்தலங்களில் உள்ள அனைத்துவித வசதிகளை மேம்படுத்தும் குறிக்கோளுடனும் இந்த சிறப்பு அமைப்பு செயல்படும்.

தமிழ்நாடு, தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதில் சிப்காட்டின் பங்களிப்பு அளப்பரியது. தொழில் வளர்ச்சியுடன் சுற்றுலா வளர்ச்சியையும் மேம்படுத்தி, முதலீட்டை ஈர்க்கும் வண்ணம் சுற்றுலாதலங்களில் உகந்த இடங்களை சிப்காட் தேர்வு செய்து. தனியார் பங்களிப்புடன் சுற்றுலாதலங்களின் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தும். இதனால் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியும், சுற்றுலா வளர்ச்சியும் ஒருங்கிணைந்து தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒரு புதிய மைல்கல்லை நோக்கி பயணிக்கும்.

வெகுவிரைவில் முதலமைச்சர் அவர்கள், அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவன தலைவர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்க உள்ளார். இந்த பயணத்தில் தமிழ்நாட்டில் தடம்பதிக்காத முக்கிய தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்போம் என்று தெரிவித்தார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.