Public Exam Dates: 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு! அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி!
“தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்”
தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை அண்ணா நூற்றண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரம் மாதம் 8ஆம் தேதி நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 25ஆம் தேதி நிறைவடையும் என்றும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
பாடம் | தேதி |
தமிழ் | 26.03.2024 |
ஆங்கிலம் | 28.03.2024 |
கணிதம் | 01.04.2024 |
அறிவியல் | 04.04.2024 |
சமூக அறிவியல் | 08.04.2024 |
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
பாடம் | தேதி |
மொழிப்பாடம் | 04-03-2024 |
ஆங்கிலம் | 07-03-2024 |
இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் | 12-03-2024 |
புள்ளியியல், கணினி அறிவியல் | 14-03-2024 |
உயிரியல், வரலாறு, வணிக கணிதம் | 18-03-2024 |
வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் | 21-03-2024 |
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
பாடம் | தேதி |
மொழிப்பாடம் | 01-03-2024 |
ஆங்கிலம் | 05-03-2024 |
கணினி அறிவியல், உயிரி- அறிவியல், புள்ளியியல் | 08-03-2024 |
வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் | 11-03-2024 |
இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் | 15-03-2024 |
கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் | 19-03-2023 |
தேர்வு முடிவுகள் எப்போது?
தேர்வு முடிவுகளை பொறுத்தவரை 12 வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 14ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதியும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.