Evening Top 10 News: சி.வி.சண்முகம் பேச்சு மோசம் முதல் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி வரை - மாலை டாப் 10 நியூஸ்!
Evening Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

Evening Top 10 News: தமிழ்நாடு முதல் உலகம் வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
சி.வி.சண்முகத்துக்கு நீதிமன்றம் கண்டனம்
முதலமைச்சர் பற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது. 2022ல் விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
கோவை காவல்துறை நடத்திய அதிரடி வேட்டை
கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3.71 கோடி செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளதாக கோவை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனி பிரிவு தொடங்கப்பட்டு பொதுமக்கள் தவறவிடும் செல்போன்கள் குறித்து உரிய புகார் பெற்று, IMEI நம்பரை வைத்து செல்போன்களை கண்டறிந்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். அதன்படி 2024-ல் பொதுமக்கள் தவறவிட்ட ₹94.78 லட்சம் மதிப்பிலான 504 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.