IAS Transfer: கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி! டாஸ்மாக் எம்.டி உட்பட 16 ஐ.ஏ.எஸ்கள் அதிரடி மாற்றம்
மேலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் வர வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தகவல
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ள நிலையில் செங்கல்பட்டு ஆட்சியர், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உட்பட 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் வர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாகப்பட்டினம் ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராக நியமனம்
வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையின் இணை செயலாளர் அன்னி மேரி ஸ்வர்னா ஐ.ஏ.எஸ் அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்
கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சாவூர் ஆட்சியராக நியமனம்
வணிகவரித்துறை இணை செயலாளர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா புதுக்கோட்டை ஆட்சியராக நியமனம்
தமிழ்நாடு ஆரோக்கிய திட்ட இயக்குநர் எஸ்.உமா நாமக்கல் ஆட்சியராக நியமனம்
சர்வே மற்றும் நில பதிவு துறையின் கூடுதல் இயக்குநர் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரம் ஆட்சியராக நியமனம்
தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேஷன் நிர்வாக இயக்குநராக உள்ள கமல் கிஷோர் செங்கல்பட்டு ஆட்சியராக நியமனம்
வணிகவரித்துறையின் இணை ஆணையர் எஸ்.சங்கீதா மதுரை ஆட்சியராக நியமனம்
தொழில் வழிகாட்டுதல் பிரிவின் செயல் இயக்குநர் ஆஷா அஜித் சிவகங்கை ஆட்சியராக நியமனம்
நகராட்சி நிர்வாக துறையின் இணை ஆணையர் விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் ஆட்சியராக நியமனம்
செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் தூத்துக்குடி ஆட்சியராக நியமனம்
சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் திருப்பூர் ஆட்சியராக நியனம்
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்கள் மற்றும் கழிவுநீர் வாரிய செயல் இயக்குநர் ராஜகோபால் சுகர்னா ஈரோடு ஆட்சியராக நியமனம்
சேலம் சேகோசர்வே நிர்வாக இயக்குநர் பூங்கொடி திண்டுக்கல் ஆட்சியராக நியமனம்
ராமநாதபுரம் ஆட்சியர் ஜான் டாம் வர்கீஸ் நாகப்பட்டினம் ஆட்சியராக நியமனம்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிட்டெட் நிர்வாக இயக்குநர் கே.எம்.சரயு கிருஷ்ணகிரி ஆட்சியராக நியமனம்
கணக்கெடுப்பு மற்றும் தீர்வுகள் துறை இயக்குநர் டி.ஜி.வினய் தொழில்நுட்ப கல்வி இயக்குநராக நியமனம்
சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கணக்கெடுப்பு மற்றும் தீர்வுகள் துறை இயக்குநராக நியமனம்
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் கோவிந்த ராவ் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்தின் திட்ட இயக்குநராக நியமனம்
திருப்பூர் ஆட்சியர் வினீத் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய இயக்குநராக நியமனம்
தமிழ்நாடு வாணிபர் கழக மேலாண் இயக்குநர் எல்.சுப்பிரமணியன் வேளாண் ஆணையராக நியமனம்
தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் கூடுறவு சங்கங்களில் பதிவாளராக நியமனம்
தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் பதிவுத்துறை ஆய்வாளராக நியமனம்
தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலாளர் விவேகானந்தன் கைத்தறித்துறை ஆணையராக நியமனம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்
நிதித்துறையின் சிறப்பு செயலாளர் ரீத்தா ஹரிஷ் தாக்கர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சிறப்பு செயலாளராக நியமனம்
எழுதுப்பொருட்கள் மற்றும் அச்சகத்துறையின் ஆணையர் சுகந்தி அருங்காட்சியகங்கள் துறை ஆணையராக நியமனம்
ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுன்னி நிதித்துறை இணை ஆணையராக நியமனம்
அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம்
நில நிர்வாகத்துறையின் கூடுதல் ஆணையர் வி.ஆர்.சுப்புலட்சுமி வணிகவரித்துறையின் கூடுதல் ஆணையராக நியமனம்