IAS Transfer: ‘மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு!’ இத்தனை அதிகாரிகள் மாற்றமா? அடேங்கப்பா!
ஜூலை மாதத்தில் இரண்டாவது முறையாக ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கெனவே ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடைபெற்று உள்ள நிலையில், தற்போது மீண்டும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டு உள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஜூலை 16ஆம் தேதி அன்று 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டு இருந்தார்.
அப்போது, தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். கள்ளச்சாராய மரணங்கள், ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சுட்டிக்காட்டி தமிழக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் ஐஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் நடைபெற்று உள்ளது.
