தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kalaignar 100: ‘ஐயா நீங்கள் வாஜ்பாயை ஆதரிக்கலாமா?’ கலைஞர் சொன்ன பதில்! நினைவு கூர்ந்த கே.எஸ்.அழகிரி

kalaignar 100: ‘ஐயா நீங்கள் வாஜ்பாயை ஆதரிக்கலாமா?’ கலைஞர் சொன்ன பதில்! நினைவு கூர்ந்த கே.எஸ்.அழகிரி

Kathiravan V HT Tamil
Jun 07, 2023 08:49 PM IST

”தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் கொள்கை சார்ந்த மனிதராக அவர் இந்த நூற்றாண்டில் இருந்தார்”

சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

ட்ரெண்டிங் செய்திகள்

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள்
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள்

தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் கொள்கை சார்ந்த மனிதராக அவர் இந்த நூற்றாண்டில் இருந்தார்.

அவருக்கு வந்த சோதனைகளை ஏற்றுக்கொண்டு அதில் வெற்றி பெற போராடினார். ஒரு முறை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தாமகவும், திமுகவும் கூட்டணி. அந்த நேரத்தில் வாஜ்பாயை ஆதரித்து வாக்களிக்க முடிவு செய்திருந்தார், தாமக வாஜ்பாய்க்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்தது.

நாங்கள் சென்று கலைஞரிடம் சென்று கேட்டோம் ‘ஐயா நீங்கள் வாஜ்பாயை ஆதரிக்கலாமா?’ என்று கேட்டோம். அப்படி கேட்கும் உரிமையை அவர் எங்களுக்கு தந்து இருந்தார்.

அவர் சிறிதும் தயக்கமின்றி “உங்கள் கேள்வி சரியானது, இரண்டு பாம்புகள் இருக்கின்றன. நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பாம்புகளையும் அடிக்க சொல்கிறீர்கள்; அது என்னால் முடியாது, என்னால் ஒரு பாம்பைத்தான் அடிக்க முடியும் எனவே ஒரு பாம்பை அடிப்பதற்காக இன்னொரு பாம்பை நான் விட்டுவிடுகிறேன்” என்று சொன்னார்.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒரு மாநில முதலமைச்சர் என்ற முறையில் மத்திய அரசோடு தோழமை பூணுகிறார். ஆனால் அதே நேரத்தில் சட்டமன்றத்தில் தனது கொள்கைகளை உறுதிப்படுத்துவதில் உறுதியாக உள்ளார். மோடியின் மூன்று திட்டங்களை அவர் சட்டமன்றத்தில் கடுமையாக விமர்சித்தார். அதற்கெதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அதனை பதிவு செய்தார். கலைஞருக்கு உள்ள பேராண்மை தளபதி ஸ்டாலினுக்கும் உள்ளது.

நாடாளுமன்ற திறப்பு விழாவில் சைவ ஆதீனங்களை மட்டும் அழைத்துள்ளீர்கள். 50 கோடி மக்களின் பிரதிநிதித்துவம் அங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது என கே.எஸ்.அழகிரி பேசினார்.

 

IPL_Entry_Point