Tamil Nadu Assembly: தொழில்துறை அமைச்சரின் மாமனார் ஊருக்கு சிப்காட் கேட்ட எம்.எல்.ஏ! பேரவையில் சிரிப்பலை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Nadu Assembly: தொழில்துறை அமைச்சரின் மாமனார் ஊருக்கு சிப்காட் கேட்ட எம்.எல்.ஏ! பேரவையில் சிரிப்பலை

Tamil Nadu Assembly: தொழில்துறை அமைச்சரின் மாமனார் ஊருக்கு சிப்காட் கேட்ட எம்.எல்.ஏ! பேரவையில் சிரிப்பலை

Kathiravan V HT Tamil
Jun 24, 2024 12:55 PM IST

Tamil Nadu Assembly 2024: “திருத்துறைப்பூண்டிக்கு பல பெருமைகள் உள்ளது. அந்த பெருமையில், தொழில்துறை அமைச்சர் அவர்கள் எங்கள் பகுதியின் மருமகனாக உள்ளார். முத்துப்பேட்டையை மையமாக கொண்டு இறால் மற்றும் மீன்களை பதப்படுத்தும் தொழிற் கூடங்கள் தொடங்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

Tamil Nadu Assembly: தொழில்துறை அமைச்சரின் மாமனார் ஊருக்கு சிப்காட் கேட்ட எம்.எல்.ஏ! பேரவையில் சிரிப்பலை
Tamil Nadu Assembly: தொழில்துறை அமைச்சரின் மாமனார் ஊருக்கு சிப்காட் கேட்ட எம்.எல்.ஏ! பேரவையில் சிரிப்பலை

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

சட்டப்பேரவை 4ஆம் நாள் கூட்டம்

இன்றைய தினம் உயர்க்கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பள்ளிக்கல்வித்துறை, சட்டத்துறை, சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப் பணிகள் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பதில் அளித்து பேசி புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

மாமனார் ஊருக்கு சிப்காட்- பேரவையில் சிரிப்பலை

கேள்வி நேரத்தின்போது, திருத்துறைப்பூண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள மாரிமுத்து, “திருத்துறைப்பூண்டியில் தொழிற்பேட்டையை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி, காவிரி டெல்டாவின் வடிநிலப்பகுதியான திருத்துறைப்பூண்டி விவசாயம் சார்ந்து உள்ளது. விவசாயம் பொய்த்து போனதால், கொற்கையில் வேளாண் உற்பத்தி சார்ந்த தொழிற்பேட்டையை அமைக்க வேண்டும்” என கூறினார். 

இதற்கு பதில் அளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ”நான் ஒரு டெல்டாக்காரன் என்று முதலமைச்சர் பெருமையுடன் கூறி உள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு டெல்டா பகுதியில் 1000 கோடி ரூபாய்க்கு வேளாண் தொழில் வழித்தடம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அங்கு உள்ள படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க அரசு முனைப்புடன் செயல்படும். கொற்கையில் 400 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. அங்கு அணுகுசாலை இல்லை. அந்த சாலை அமையும் போது புதிய சிப்காட் அமைய ஏற்பாடு செய்வோம் என தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து பேசிய திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ மாரிமுத்து, “திருத்துறைப்பூண்டிக்கு பல பெருமைகள் உள்ளது. அந்த பெருமையில், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் எங்கள் பகுதியின் மருமகனாக உள்ளார் என்பதையும் பெருமையாக கருதுகிறோம். அந்த பெருமைக்கு மகுடம் சூட்டும் வகையில் முத்துப்பேட்டையை மையமாக கொண்டு இறால் மற்றும் மீன்களை பதப்படுத்தும் தொழிற் கூடங்கள் தொடங்கப்படுமா என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ”மாமனார் ஊருக்கான தேவை பூர்த்தி செய்யப்படுமா என கேட்டு என்னை கஷ்டத்தில் தள்ளி உள்ளீர்கள். இதற்கு எதிர்மறையாக பதில் சொல்லிவிட்டு நான் எங்கள் ஊருக்கும் செல்ல முடியாது, எனது வீட்டுக்கும் போக முடியாது. நல்ல வேளையாக முதலமைச்சர் எங்களை காப்பாற்றி உள்ளார். ஏற்கெனவே அங்கே ஒரு தொழில்பேட்டை அமைத்து உள்ளார். திருவாரூர்- நாகை- கடற்கரை சாலையில் இறால் பண்ணைகள் நிறைந்து உள்ளது. அங்கு கடல் உணவு பதப்படுத்தும் அலகு இல்லாதாது ஒரு குறையாகத்தான் இருந்து வருகின்றது. வெகு விரைவில் அப்பகுதி விவசாயிகளுக்கும், மீனவ பெருங்குடி மக்களுக்கும் நற்செய்தி கிடைக்கும் என தெரிவித்தார்.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.