தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly 2023: அதிக கேள்விகளுக்கு பதிலளித்த டாப் 5 அமைச்சர்கள்! இதிலும் இவர்தான் No.1

TN Assembly 2023: அதிக கேள்விகளுக்கு பதிலளித்த டாப் 5 அமைச்சர்கள்! இதிலும் இவர்தான் No.1

Kathiravan V HT Tamil
Apr 21, 2023 01:57 PM IST

கடந்த மார்ச் 21ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் நடந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளுக்கான மானியக்கோரிக்கை விவாதத்தில் பதிலளித்து பேசும் அமைச்சர் செந்தில் பாலாஜி
சட்டப்பேரவையில் நடந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளுக்கான மானியக்கோரிக்கை விவாதத்தில் பதிலளித்து பேசும் அமைச்சர் செந்தில் பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

மார்ச் 21ஆம் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிலையில், துறை ரீதியிலான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வந்தது.

மானியக்கோரிக்கை விவாதங்களில் பேசிய சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர்கள் துறைசார்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

காவல்துறை மானியக்கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் நேற்று தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு தினங்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

கடைசிநாளான இன்று சட்டப்பேரவை முடிவுறும் நிலையில் நிறைவுரையை சபாநாயகர் அப்பாவு ஆற்றினார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற கேள்வி நேரத்தின் போது அதிக கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள் பெயரை வெளியிட்டார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

அதில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 17 கேள்விகளுக்கு பதிலளித்து முதலிடத்தி உள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, 15 கேள்விகளுக்கு பதிலளித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு 14 கேள்விகளுக்கு பதிலளித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 12 கேள்விகளுக்கு பதிலளித்து நான்காம் இடத்திலும்,

<p>மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்</p>
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 10 கேள்விகளுக்கு பதிலளித்து ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

IPL_Entry_Point