Tamil Live News Updates: பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்க பஜ்ரங் புனியா முடிவு
Tamil Live News Updates: இன்றைய (22.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்க பஜ்ரங் புனியா முடிவு
பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளாா். பிரிஜ் பூஷன் ஆதரவாளா் சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த சங்க தலைவராவதற்கும், பாலியல் புகாரில் பிாிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காததற்கும் எதிர்ப்பு தொிவித்து விருதை ஒப்படைக்க முடிவெடுத்துள்ளாா் பஜ்ரங் புனியா.
தெற்கு ரயில்வே தகவல்!
Chennai: சென்னை புறநகர் ரயில் சேவை வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று ஞாயிறு அட்டவணையின் படி இயங்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி வெள்ளம்: 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
Thoothukudi Floods: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேரை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை விடுவித்தது மத்திய அரசு!
Tax devolution: மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரேதச மாநிலத்திற்கு ரூ.13,088.51 கோடி கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!
Actor Mansoor Alikhan: தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட ஈடு வழக்க தொடர அனுமதி கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன்
Nirmala Sitharaman: தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டபோது கூட தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை, மாநில பேரிடராக அறிவிக்க நினைத்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளாா்.
முதல்வருடன் பொன்முடி
சொத்துகுவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடி CM ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், வழக்கில் சட்ட ரீதியாக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மேல்முறையீடு செய்வது குறித்தும் பேசியதாக தெரிகிறது.
பரோட்டா சாப்பிட்ட மாணவர் மாரடைப்பால் மரணம்
கோவையில் பரோட்டோ சாப்பிட்டு தூங்கிய கல்லூரி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரியில் படித்துவந்த மாணவர் ஹேமசந்திரன், நேற்று இரவு நண்பர்களுடன் பரோட்டோ சாப்பிட்டு தூங்க சென்றுள்ளார்.
புண்படுத்தும் வார்த்தைகளை அரசியல் கட்சியினர் பயன்படுத்தக் கூடாது - தேர்தல் ஆணையம்
ஊமை, குருடன், செவிடன் மற்றும் நொண்டி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை அரசியல் கட்சியினர் மற்றும் கட்சி தலைவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் மதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவோம் என்பதை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளங்களில் அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.22) சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ரூ.46,880க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 உயர்ந்து ரூ.5,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
Silver Rate: சென்னையில் வெள்ளியின் விலை இன்று (டிச.22) கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ரூ.81 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.81,000-க்கு விற்பனையாகிறது.
தூத்துக்குடியில் ரயில்கள் மீண்டும் இயக்கம் !
Train: மழை பாதிப்புகள் சீர் செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடிக்கு செல்லும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தகவல் தெரிவிக்கப்படுள்ளது.
நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை தூத்துக்குடி சென்றடைந்தது.
திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொரோனா!
Corona: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லையில் ஜன.2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
School Holiday: கனமழையால் நெல்லை மாவட்டம் பரவலாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லையில் ஜன.2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது!
Cylinder Price: 19 கிலோ எடையிலான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 39.50 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1968.50க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை ரூ.1929க்கு விற்கப்படுகிறது.
நெல்லையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை
Rain Update: நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் 1 முதல் 8ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இயங்கும். அரையாண்டு தேர்வு இல்லை. அதேசமயம் தண்ணீர் தேங்கி உள்ளதால் நெல்லையில் 11 மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
Petrol Diesel Price: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று டிசம்பர் 22ஆம் தேதி 580 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை ஆகிறது.
டாபிக்ஸ்