Tamil Live News Updates: டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

Tamil Live News Updates: டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

HT Tamil Desk HT Tamil
Dec 18, 2023 05:47 PM IST

Tamil Live News Updates: இன்றைய (18.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

Nellai Rains: நெல்லையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாளையங்கோட்டை புனித சேவியர்ஸ் கல்லூரியில் தங்கிக்கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

CM MK Stalin: டெல்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்த, பிரதமரை சந்திக்கவும் நேரம் கோரியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மக்களவையில் மேலும் 31 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

Lok Sabha security breach: நாடாளுமன்ற மக்களவையில் மேலும் 31 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார். திமுகவின் டி.ஆர். பாலு, காங்கிரஸ் கட்சியின் அதிரஞ்சன் சவுத்ரி என முக்கிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Thoothukudi: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

கூடுதல் அமைச்சர்கள் நியமனம்

TN Rains: நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வேகப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் ஏற்கனவே களத்தில் உள்ள நிலையில், அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலும் ராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

TN Rains: வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண் - 8148539914 மற்றும் ட்விட்டர் மூலமாக நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள் கோரலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

திமுகவினர் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MK Stalin: தென் மாவட்டங்களில் பெய்துள்ள அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட, அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அவர்களது பகுதியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும்; நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை 

மீண்டும் ரெட் அலார்ட் விடுப்பு

Red Alert: கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இன்று ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுப்பு

மக்களுடன் முதலமைச்சர் திட்டம் தொடக்கம்

MK STALIN: கோவையில் மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து குறைகளை கேட்டறிந்தார்.

நெல்லை விரையும் உதயநிதி ஸ்டாலின்

Tirunelveli: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், வெள்ளபாதிப்புகளை பார்வையிட அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை செல்கிறார்

கட்டணமில்லா தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்

Heavy Rain: 1070 என்ற கட்டணமில்லா எண்ணில் பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை சொல்லலாம். இதுவரை 3863 புகார்கள் இந்த எண் மூலம் வந்துள்ளது. அதில் 3732 புகார்களில் நடவடிக்கை எடுத்துள்ளோம். 144 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா

'ஓராண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது!'

Heavy Rain: காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது- தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Chidhambaram Nadarajar Temple: நடராஜர் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள பிரம்மாண்டமான உற்சவர் கொடி மரத்தில் உற்சவர் கொடியை உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சதர் ஏற்றி வைத்தார்.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா இம்மாதம் 26 ஆம் தேதியும் ஆருத்ரா தரிசன விழா 27ஆம் தேதி நடைபெறுகிறது.

தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கம்

Tirunelveli: சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்

3 அணைகள் திறப்பு

DAM: விருதுநகர்: சாத்தூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வெம்பக்கோட்டை,கோல்வார்பட்டி, இருக்கன்குடி ஆகிய 3 அணைகள் திறக்கப்பட்டுள்ளன

மழையால் பல்வேறு ஏரி, கண்மாய்கள், குளங்கள் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்லாமல் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கும்பக்கரையில் மீண்டும் குளிக்கத் தடை

Theni: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

43 நாட்களாக மூடப்பட்டிருந்த அருவியில் கடந்த 2 தினங்களாக குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது

கர்பிணிகள் மருத்துவமனையில் சேர்ப்பு

Tirunelveli: ரெட் அலார்ட் எச்சரிக்கை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 24 கர்ப்பிணி பெண்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கல்லூரிகளுக்கும் விடுமுறை

Holiday: தொடர் கனமழையால் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

சிவகங்கை பள்ளிகளுக்கு விடுமுறை

School Holiday: தொடர் கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

4 மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிப்பு

Heavy Rain: தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிப்பு

வந்தே பாரத் ரயில் சேவை ரத்து

Vande Bharat Express: தொடர் மழையால் சென்னை - திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இரு மார்க்கங்களிலும் ரத்து 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.