Tamil Live News Updates: நாளை 4 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: நாளை 4 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Tamil Live News Updates: நாளை 4 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

HT Tamil Desk HT Tamil
Dec 17, 2023 06:01 PM IST

Tamil Live News Updates: இன்றைய (17.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

கார் விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு!

Theni: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் காரில் பயணித்த ஐயப்ப பக்தர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சபரிமலைக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பும் வழியில் கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மேலும் 2 ஐயப்ப பக்தர்கள் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வறண்ட பகுதிகளுக்கு நதி நீர் இணைப்புத் திட்டத்தைக் கொண்டுசெல்ல சோதனை முயற்சி செய்ய ஆணை!

தென்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

4 மாவட்டங்களில் அதிகனமழை!

TN Rain Update: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிகளில் மழை கொட்டித்தீர்க்கிறது.

எண்ணூரில் எண்ணெய் கலப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

Ennore: எண்ணூரில் எண்ணெய் கலப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500ம், படகுகளுக்கு தலா ரூ.10,000ம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் பாதித்த மீனவ கிராமங்களில் 2300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் சுமார் 700 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணி வெற்றி 

Cricket: வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி. மழை காரணமாக போட்டி 30 ஓவர்களாக குறைக்கப்பட்டு 245 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

தென் தமிழ்நாட்டிற்கு விரையும் தேசிய பேரிடர் மீட்புப் படை

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு குழு

அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டுச் சென்றன

நாளை ஆரஞ்சு அலார்

Rain Alert: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை ஆரஞ்சு அலார்ட்

அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பு

Rain Alert: பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து 10,000 கன அடியாக இருப்பதால், முன்னெச்சரிக்கையாக தாமிரபரணியில் 3000 கன அடி தண்ணீர் திறப்பு

பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் தாமிரபரணியில் 5000 கன அடி அளவிற்கு நீர் செல்லும் என்பதால், ஆற்றின் கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

தென் தமிழ்நாட்டில் கூடுதல் மழை பதிவு

Rain: கன்னியாகுமரியில் இயல்பை விட 81% கூடுதல் மழையும், நெல்லையில் இயல்பை விட 61% கூடுதல் மழையும் பதிவு

உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையம் திறப்பு

Surat: சூரத்தில் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

3 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

Rain Alert: நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் நாளை 2 நாட்களுக்கு இடைவிடாத மழை பெய்யும் - தனியார் வானிலை ஆய்வாளர்

மக்களவை அத்துமீறல் - எரிந்த செல்போன்கள் பறிமுதல் 

Parliamnet: நாடாளுமன்ற அத்துமீறலில் ஈடுபட்டவர்களின் எரிக்கப்பட மொபைல் போன் பாகங்களை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

6 ஆயிரம் நிவாரணம் திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார்

Chennai Floods: சென்னை வேளச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

அவதூறு பேச நினைப்பவர்களுக்கு விழுந்த அறை

CM MK Stalin: மிக்ஜாம் புயலின் பாதிப்புகளைப் பார்வையிட வந்த ஒன்றிய குழுவினரும், அரசியல் மாச்சரியமின்றி திராவிட மாடல் அரசின் பணிகளைப் பாராட்டியிருப்பது நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழ் மட்டுமல்ல, அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்றால் மிகையல்ல - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது

Mettur Dam: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2753 கன அடியில் இருந்து 1978 கன அடியாக குறைந்தது

எண்ணெய் கழிவுகள் கலப்பு - கமல் ஆய்வு

Kamalhasan: எண்ணூரில் கடலில் கச்சா எண்ணெய் கலந்த பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு 

6 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கும் திட்டம் இன்று தொடக்கம் 

Chennai Floods: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தை வேளச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

மழை நிவாரணம் - தொலைபேசி எண்கள் அறிவிப்பு

Chennai Floods: மிக்ஜாம் புயல் நிவாரணம் தொடர்பான சந்தேகங்களை 044-2859 2828 மற்றும் 1100 ஆகிய எண்களில் பொதுமக்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என அறிவிப்பு.

மழை எச்சரிக்கை

Rain: கன்னியாகுமரி, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

மெட்ரோவில் 5 ரூபாயில் பயணிக்கலாம்

Chennai Metro: சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று 5 ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என அறிவிப்பு.

உலகின் மிகப்பெரிய கட்டடம் இன்று திறப்பு

Surat: குஜராத் மாநிலம் சூரத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.

காசி தமிழ் சங்கமம் ரயில் சேவை

Kasi Tamil Sangamam: கன்னியாகுமரி-வாரணாசி வரை செல்லும் காசி தமிழ்ச் சங்கமம் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இன்று முதல் ஒருநாள் போட்டி

Cricket: இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஜோகனேஸ்பர்க் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடக்கம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.