Supreme Court : உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு!-supreme court sdpi welcomes the supreme court decision that the state government has the authority to grant internal al - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Supreme Court : உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு!

Supreme Court : உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 03, 2024 08:02 AM IST

Supreme Court : பஞ்சாப் மாநிலத்தின் உள் ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, பட்டியலின இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளது.

பட்டியலின இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு!' - நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு
பட்டியலின இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு!' - நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பஞ்சாப் மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் பட்டிலின இட ஒதுக்கீட்டில், பட்டியலினத்தை சேர்ந்த மிகவும் பின்தங்கிய இனத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் உள் ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, பட்டியலின இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது.

பஞ்சாப், மற்றும் ஹரியானா மற்றும் தமிழ்நாட்டில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் இந்த 

உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டே பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கும் மாநில அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதும், பட்டியலின சமூகங்களிடையே உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? என்பது குறித்த வழக்கில் தான், மாநில அரசுக்கு அதற்கான உரிமை உள்ளது என 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் குறுக்கீடு

பட்டியலின இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பட்டியலின மக்கள் மத்தியில் பிரிவினை, பாரபட்சம் ஏற்படும் என்கிற வாதங்களை நிராகரித்த அரசியல் சாசன அமர்வு, பட்டியலின இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடுகளுக்கான போதிய தரவுகளோடு, பட்டியல் சாதியினர் மத்தியில் நிலவும் வேறுபட்ட ஒடுக்குமுறை காரணிகளை கணக்கில் எடுத்து, மாநில அரசுகள் அதற்காக உள் ஒதுக்கீடுகள் செய்வது அரசியலமைப்புச் சட்டம் 341 குடியரசுத் தலைவருக்கு தந்துள்ள அதிகாரங்களை மீறுவது ஆகாது என்றும், அந்த ஒதுக்கீடு செல்லத்தக்கது என்றும் தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவு மூலம் மாநில அரசுகள் உள் ஒதுக்கீடுகளை செய்வது குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்வதாகும் என்கிற 2005 ஈ.வி.சின்னையா (எ) ஆந்திரப் பிரதேசம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாற்றப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு சமூக நீதியை காக்க மாநில அரசுகள் மேற்கொள்ளும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பை வழங்கி வலுசேர்த்துள்ளது.

அதேநேரம், பட்டியலின இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர்களை அடையாளம் காண்பதற்கான கொள்கையை அரசு வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்து ஏற்புடையதல்ல. அது இடஒதுக்கீட்டின் நோக்கத்தையும், சமூக நீதியையும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கிவிடும், பட்டியலின இடஒதுக்கீடு மட்டுமல்ல, ஒபிசி இடஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை கைவிடப்பட வேண்டும் என்பதே சமூகநீதியை விரும்பும் அனைவரின் கோரிக்கையாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.